கருப்பு பூஞ்சை நோய்க்கு காரணம் இதுதானா? அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்.! 

கருப்பு பூஞ்சை நோய்க்கு காரணம் இதுதானா? அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்.! 

கொரோனாவுக்கு அடுத்ததாக கருப்பு பூஞ்சை நோய் தான் மக்களை அதிகம் பயப்படவைத்திருக்கிறது. இது கொரோனாவால் மீண்டவர்களையே தாக்குவதால் கொரோனாவில் மீண்ட நோயாளிகள் இதைக் கண்டு அதிகம் அஞ்சுகிறார்கள். இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தொழிற்சாலை ஆக்சிஜன் காரணமாக இருக்குமா என ஆராச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள். 

கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாம் அலை இந்தியாவை கடுமையாக பாதித்தது. இதன் காரணமாக பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். திடீரென அதிகமான நோயாளிகளால் ஆக்சிஜன் தேவை அளவுக்கு அதிகமாக தேவை பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவ பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டன. கொரோனா நோயாளிகள் பலருக்கு  இதன் மூலமே ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

கொரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் வித்தியாசம் இந்த தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் மக்களுக்கு பயன்படுத்தப்பட்டதே. எனவே இதுவே கருப்பு பூஞ்சை நோய்க்கு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

மேலும் சில மருத்துவமனைகளில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத படுக்கைகள், மருத்துவ உபகரணங்களை தற்போது பயன்படுத்துகின்றனர்.சிகிச்சைக்கான அறைகளில் துாசி இருக்கும் இதுவும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.