ரௌடிகளின் லிஸ்ட் தயார்,.. இன்னும் ஒரே வாரம் தான்,.. எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்.!  

ரௌடிகளின் லிஸ்ட் தயார்,.. இன்னும் ஒரே வாரம் தான்,.. எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்.!  

16 ரௌடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது ஒரு வாரத்திற்குள் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் 
 என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் காவல் அதிகாரிகள் சென்னை பெருநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செய்யப்பட்டுள்ள காவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் "டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் கூட்டம் அதிகமாகி கொரோனா தொற்று பாதித்து விடக்கூடாது என்பதற்காக கடையில் இருந்து சுமார் 50 மீட்டர்க்கு பேரிகாடுகள் அமைத்துள்ளோம், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக வளையம் வரைந்து கூட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது" எனக் கூறினார். 

அதன்பின்னர் ரௌடி காக்கா தோப்பு பாலாஜி கைது குறித்து பேசிய அவர் ஆர் கே நகர் பகுதியில் இன்று காலை நான்கு மணி அளவில் கைது செய்தோம் ஆறு கொலை வழக்குகள் உட்பட 55 வழக்குகள் உள்ளது. 23 கிலோ கஞ்சா விற்பனை அவர் வைத்திருந்ததுடன் உடன் ஒரு பட்டாக்கத்தி வைத்திருந்தார்.காவலர்களை கண்டு அவர்கள் ஓடுகிறார்கள் அப்போது அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது"என்ற அவர் 16 ரௌடிகளின் பட்டியலை எடுத்துள்ளோம் ஒரு வாரத்திற்குள் அவர்களை கைது செய்ய உள்ளோம் என எச்சரித்தார்.


மேலும் யூடியூபர் மதன் குறித்து புகார் வந்துள்ளது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், சென்னையில் போக்குவரத்து நெரிசலால் தொற்று ஏற்படாது, அத்தியாவசியத் தேவை இன்றி வெளியே வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.