பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி வருகிற 28/06/2023 (புதன்கிழமை) இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலானது சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு (வியாழக்கிழமை) காலை 11.45 மணிக்கு வந்து சேரும்.

மறுமார்க்கம் 29/06/2023 (வியாழக்கிழமை) மதியம் 3 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிக்க: திருவிழாவில் ஆபாச நடனம்.. கிராம நிர்வாகி உட்பட மூவர் கைது!!