வேலுமணிய எப்போது கைது பண்ணுவோம்? திமுகவினர் கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூசக பதில்!..

முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது எப்போழுது என திமுக நிர்வாகிகளின் கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.

வேலுமணிய எப்போது கைது  பண்ணுவோம்? திமுகவினர் கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூசக பதில்!..

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது. இதில் திமுக சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகிகள் இங்குள்ள அதிகாரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குதான் விசுவாசமாக உள்ளனர். நம் பேச்சை கேட்பதில்லை. நாம் சொன்னால் குப்பை கூட அள்ளுவதில்லை என்றனர்.

 இதனையடுத்து பேசிய சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வேலுமணி ரெய்டு முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன அவரை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் நான் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் என்ற அடிப்படையில் கேட்கிறேன் என்றும் தினசரி சமூகவலைதளங்களில் என்னிடம் அதுகுறித்து பலர் கேட்பாதாகவும், கைது செய்ய தாமதம் ஆவதால், சமரசம் ஆகிவிட்டீர்களா என்றெல்லாம் கேட்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்று செந்தில் பாலாஜியை பார்த்து பேசினார். சிவசேனாபதியின் கருத்தை ஆமோதிப்பது போல, கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் கைதட்டி அதே கேள்வியை முன்வைத்தனர்.

இந்த நிலையில் கூட்டத்தில் கடைசியாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளாட்சி தேர்தல் எப்போழுதும் வேண்டுமானாலும் வரலாம், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் திமுக வென்றது என்ற நிலையை உருவாக்க வேண்டும், அதிகபட்சம் 75 நாள்கள்தான். நம் கவுன்சிலர்கள், மேயர்கள் வந்துவிடுவார்கள். அதன்பிறகு நாம் சொல்வதை கேட்டுத்தானே ஆக வேண்டும் என பேசினார். ரெய்டு முடிந்துவிட்டது. கைது எப்போது. அதிகாரிகள் நாம் சொல்வதை கேட்பதில்லை என்று சொல்கின்றனர்.

நமக்கு பின்னால் ஓடுபவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருக்கும்போது, பின்னால் திரும்பி பார்த்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நம்ம மட்டும் தான் ஜெயிக்க போகிறோம், அந்த தைரியம் மனதுக்கு வேண்டும்.பொறுமையாக செல்வோம். சட்டம் தன் கடமையை செய்யும். நாம் நம் பணிகளை செய்வோம் என சூசகமாக தெரிவித்தார்.