ஜாலியா போகலாம்.....‘ஜாய் ரைடு '....! உதகையில் மலை இரயில் சேவை தொடக்கம்...!

ஜாலியா போகலாம்.....‘ஜாய் ரைடு '....! உதகையில் மலை இரயில் சேவை தொடக்கம்...!

கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை - கேத்தி இடையே ‘ஜாய் ரைடு ' என்ற மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. 

உதகையில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருவதால், இதமான கால நிலையை அனுபவிக்க வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 
இதில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 இதையும் படிக்க:... பிரிந்து சென்ற தலைவர்கள்..! பின்னடைவில் பாஜக...! பெங்களூரு தேர்தலில் இனி நிலை என்ன?

இதனால் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை - கேத்தி இடையே ' ஜாய் ரைடு ' என்ற மலை ரயில் சேவையை இன்று முதல் தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.  
இதல் முதல் வகுப்பில் பயணிக்க நபர் ஒருவருக்கு 630 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் பயணிக்க நபர் ஒருவருக்கு 465 ரூபாயும் டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பயணம் செய்யும் பயணிகளுக்கு வெஜிடெபிள் சூப், டீ, காபி, மற்றும் சாவி கொத்து உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில் சேவை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்க:.....இருக்கைக்காக அதிமுக சண்டையிடுவது சரியான முறை அல்ல.... சசிகலா பேச்சு!!!