"ஊழலை விட, சாதி மற்றும் போதை சமூகத்தை பாதிக்கும்" தொல். திருமாவளவன் பேச்சு!

"ஊழலை விட, சாதி மற்றும் போதை சமூகத்தை பாதிக்கும்" தொல். திருமாவளவன் பேச்சு!

போதையை தடுப்பதற்கு சட்டங்கள் இருந்தும் தடுக்க முடியவில்லை, போதைக்கு எதிராக அகில இந்திய அளவில் தேசிய கொள்கை வரையறுக்கப்பட வேண்டும், விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ( DYFI ) போதையற்ற தமிழ்நாடு - ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் நிறைவு விழா நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், "ஒரு மக்கதான பேர் இயக்கம், வெகு மக்கள் கலந்து கொள்ளும் புரட்சிகரமான நடவடிக்கை, தமிழ்நாடு மட்டும் இல்லாமால் ஒட்டுமொத்த இந்தியாவும் போதை இல்லாத நாடக  மாற வேண்டும், போதை இல்லாத சமூகம் மாற வேண்டும் என்பது ஒவ்வொருக்குமான கடமையக உள்ளது" என்று பேசியுள்ளார்.

மேலும், மாநில அரசும் மத்திய அரசும் போதை பொருள் தடுப்பு சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆனால் போதை பொருள் புழுகத்தில் இருப்பதை தடுக்க முடியவில்லை, மதுவுக்கு பின்னால் விளம்பரத்தை எழுதி விட்டு, மது விற்க்கும் நிலைமை உள்ளது. பீடி, சிகரெட், அட்டைகளில் உடல் நலத்துக்கு கேடு, நுரையீரலுக்கு பாதிப்பு என்று வசனங்கள் போடப்பட்டும் விற்பனை நடைபெறுகிறது. திரைப்படங்களில் அந்த காட்சியை அமைக்க கூடாது. ஆனால் மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு என்ற வாசகத்தை போட்டு கொண்டால் மது பயன்பாடு காட்சிகளை காட்டலாம் என்ற விதிவிலக்கு இருக்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "அரசு ஏன் மதுக்கடைகளை திறக்க வேண்டும் அதை முடுவது தான் சரி என்று விவாதித்தால், அரசு மதுக்கடைகளை முடினால் கள்ளச் சாராயம் பெருகும் அதில் எந்தவிதமான உத்திரவாதுமும் இல்லை  உயிரிழப்பு ஏற்படும் அதில் இருந்து காப்பற்ற தான் மதுகடைகளை திறக்கிறது  என்ற நியாயம் சொல்லப்படுகிறது, அகில இந்திய அளவில் இது தொடர்பாக தேசிய கொள்கை வரையறுக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியுயள்ளார்.

மேலும், "இன்று இளம் தலைமுறையினர் போதை பொருளால் கடுமையாக பாதிக்கப்டுகிரர்கள் அதை கட்டுப்படுத்த முடியவில்லை நிறைய பேர் திருமணம் செய்ய முடியாமல் குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் சூழல் உள்ளது, அனைத்து வகை போதை பொருள் பழக்கத்தில் இருந்து மக்கள் மற்றும் இளைஞர்களை அனைவரையும் காப்பாற்ற வேண்டும்" என பேசியுள்ளார்.

மேலும் "அரசு செய்கிறதோ இல்லையோ நாம் செய்யதாக வேண்டும், சட்டம் தடுக்கிரதோ இல்லையோ நாம் தடுத்தாக்க வேண்டும். ஊழலை விட சமூகத்தை பயங்கரமாக பாதிக்க கூடியதில் ஒன்று சாதி. அதை ஒழித்தாக்க வேண்டும். வேறு ஒன்று போதை. அதை முற்றிலும் அழிக்க வேண்டும்" என பேசியுள்ளார்.

இதையும் படிக்க || "அதிமுக தனக்கு சொந்தம், கொடி எங்களுக்கே சொந்தம் என யாரும் கூற முடியாது" புகழேந்தி!!