தூத்துக்குடியில் சிலம்பப் போட்டிகள் துவக்கியது

தூத்துக்குடியில் சிலம்பப் போட்டிகள் துவக்கியது

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு அப்துல் கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. அப்துல் கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி  தலைவர் அருண்குமார் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த 25 பயிற்சிப்பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்ப்பட்ட பள்ளி வீர - வீரங்கனைகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, தொடு சிலம்பம் என்ற பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நடைபெற்றது. இதில் வயது வாரியாக சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறுவர், சிறுமிகளும் மாணவ, மாணவிகளும் பங்கேற்று தங்கள் சிலம்பு விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியை வஉசி துறைமுக தீயனைப்பு நிலைய அலுவலர் பாட்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து அப்துல் கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி  தலைவர் அருண்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிலம்ப விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரர்களுக்கும் சாதனை படைத்தவர்களுக்கும் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் வேண்டும் என்றார்.

இதில் அப்துல் கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி செயலாளர் அந்தோணி குபேந்திரன், பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ஜோசப் துரை ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.