முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்... அடுத்த முன்பதிவு எப்போது?

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்... அடுத்த முன்பதிவு எப்போது?

வருகின்ற தீபாவளியை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு, இன்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அணைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர்க்கு இன்று காலை 8 மணி முதல், முன் பதிவு தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே முன்பே அறிவித்திருந்தது. அதன் படி, வருகின்ற நவம்பர் 9ம் தேதி பயணம் செய்ய விரும்பியோர்க்கு, இன்று காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கியது. ஆனால், முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது.

நவம்பர் 9ம் தேதிக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்த நிலையில், அடுத்த முன்பதிவுக்கான அட்டவணை, தெற்கு ரயில்வேயால் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்பதிவு நாள்   - பயண நாள்     -  பயண கிழமை

ஜூலை 12             - நவம்பர் 09       - வியாழன்

ஜூலை 13             - நவம்பர் 10       - வெள்ளி

ஜூலை 14             - நவம்பர் 11       - சனி

ஜூலை 15             - நவம்பர் 12       - ஞாயிறு

ஜூலை 16             - நவம்பர் 13       - திங்கள்

ஜூலை 17             - நவம்பர் 14       - செவ்வாய்

ஜூலை 18             - நவம்பர் 15        - புதன் 

மேல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் பயணம் செய்ய விரும்புவோர், ரயில் நிலைய கவுண்டர்களிலும், IRCTC இணையதளத்திலும் முன்பதிவு செய்து, பயணத்திற்கான டிக்கெட்டுகளை உறுதி செய்துகொள்ளலாம்.

இணையத்தில் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், https://www.irctc. co.in/nget/train-search இந்த இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதையும் படிக்க: 1800 வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்!!