ட்விட்டரில் டிரெண்டிங்கில் "#GoBackStalin" பழிதீர்க்கும் பாஜக!!

ட்விட்டரில் டிரெண்டிங்கில் "#GoBackStalin" பழிதீர்க்கும் பாஜக!!

ஆய்வுப் பணிகளுக்காக ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #GoBackStalin, கோவைக்கு குறைந்த அளவிலான தடுப்பூசிகளே ஒதுக்கப்படுவதாகக் கூறி #GoBackStalin என்று ட்விட்டரில் பதிவிட்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர் பாஜகவினர்.


பிரதமர் மோடி தமிழகத்தை புறக்கணிக்கிறார் என்று சொல்லி அவர் தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹாஸ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும். சில நேரங்களில் இது சர்வதேச அளவில் கூட ட்ரெண்டிங்கில் இருந்தது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி காரர்களே காரணம் என்று பாஜகவினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். 

தற்போது கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு திமுகவே காரணம் என்றும், கோவையில் திமுக வெற்றிபெறாததால் கோவையை திமுக புறக்கணிக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று கோவை செல்லவிருக்கும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  #GoBackStalin என்ற ஹாஸ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் திமுகவினர் சிலர் #GoBackStalin ஹாஸ்டாக் வடஇந்தியாவில் இருந்து ட்ரெண்ட் செய்யப்படுகிறது என்றும். ஸ்டாலின் கோவைக்கு வர ஏன் வடஇந்தியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் கூறிவருகின்றனர்.