அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்!

பேருந்து சேவையை நம்பி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் நாள்தோறும் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகின்றனர்.

அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்!

ராணிப்பேட்டை அடுத்த பாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அரசு பேருந்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்துக்கு காத்திருக்கும் அவலம்

போராட்டத்தின் பொழுது வாலாஜா பேருந்து நிறுத்தத்தில் இருந்து முசிறி கிராமம் வரை பேருந்து குறித்த நேரத்திற்கு மட்டுமே இயக்கப்படுவதாகவும், வாலாஜா முசிறி செல்லும் பேருந்து சேவையை நம்பி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் நாள்தோறும் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகின்றனர்.

பேருந்து சேவையை விரிவுபடுத்த கோரிக்கை

இதனால் பல்வேறு பணிகளுக்காக பேருந்து பயணங்களை மேற்கொள்ளக்கூடிய  பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளுக்கும் கடும் பாதிப்பு அடைந்து குறித்த நேரத்திற்கு பேருந்து பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்

எனவே வாலாஜா பேருந்து நிறுத்தத்தில் இருந்து முசிறி கிராமம் வரை இயக்கப்பட்டு வரும் பேருந்து சேவையை ஆற்காடு பேருந்து நிறுத்தம் வரை தூரத்தை விரிவாக்கம் செய்து தர வேண்டும் எனவும் கூடுதலான பேருந்துகளை அப்பகுதியில் இயக்க வேண்டும் என தெரிவித்து கிராம மக்கள் மாணவ மாணவிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன