மக்களின் கவனத்தை ஈர்த்த சுவர் ‘ஓவியம்’...!

தமிழக முதல்வரால் காலை சிற்றுண்டி திட்டம் இன்று துவங்கப்பட்ட நிலையில் சென்னை புறநகர் பகுதியான கண்ணகி நகர் பகுதியில் குடியிருப்பு சுவற்றில் பள்ளி சிறுவர்கள் காலை சிற்றுண்டி அருந்துவது போல் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

மக்களின் கவனத்தை ஈர்த்த சுவர் ‘ஓவியம்’...!

பள்ளி சிறுவர்கள் காலையில் பள்ளிக்கு வந்த பிறகு காலை சிற்றுண்டி அருந்த வேண்டும் என்பதற்காகவும் பசியோடு கல்வி கற்கக் கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க | எல்லையை மீறிய தனுஷ் ரசிகை; ரத்தத்தால் வரைந்த ஓவியம் வைரல்:

காலை சிற்றுண்டி திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வகையிலும் இந்த காலை சிற்றுண்டி குறித்தான தகவலை வெளிப்படுத்தும் வகையிலும் சென்னை புறநகர் பகுதியான கண்ணகிநகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தின் சுவற்றில் பள்ளி மாணவர்கள் காலை சிற்றுண்டி அருந்துவது போல் ஓவியம் வரைபட்டுள்ளது.

மேலும் படிக்க | இதெல்லாம் ஒரு ஆர்ட்-ஆ? தவறான வழிநடத்தலுக்காக 95 லட்சம் கேட்டு வழக்கு பதிவு!!!

கண்ணகி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு சுவற்றுக்களில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு இந்த பகுதி மக்களை கவர்ந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் புதிதாக கொண்டு வந்த திட்டத்தை வெளிக்காட்டும் வகையில் பள்ளி சிறுவர்கள் காலை சிற்றுண்டி அருந்துவது போன்று வரையப்பட்ட இந்த ஓவியம் பலராலும் வியந்து பார்க்க கூடிய அளவில் உள்ளது.