அண்ணன் ஒரு வார்த்தை சொல்லட்டும்,..நாங்கள் எல்லாம் ரெடி.! திமுக கனிமொழி அதிரடி.!  

அண்ணன் ஒரு வார்த்தை சொல்லட்டும்,..நாங்கள் எல்லாம் ரெடி.! திமுக கனிமொழி அதிரடி.!  

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை குறைக்க அமைச்சர்களையும் நியமித்தார். 

2019 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. அந்த தேர்தலில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போதிலிருந்து தூத்துக்குடியில் முகாமிட்டு அங்கு மக்கள் பணியாற்றி வருகிறார். இந்த கொரோனா காலத்திலும் மாவட்டம் முழுவதும் சுற்றி அமைச்சர் கீதா ஜீவனுடன் இணைந்து பணியாற்றிவருகிறார்.  

இந்நிலையில் செய்தியாளர்களைத் சந்தித்த அவர் "நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்வதற்காக முதலமைச்சர் ஒரு ஆய்வுக் குழுவையும் அமைத்துள்ளார். திமுக நீட் தேர்வை எதிர்த்து வந்துள்ளது. தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.கண்டிப்பாக நீட் தேர்வு இல்லாத நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி காட்டுவார்.மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தந்துள்ள வாக்குறுதிகளையும் கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார். அதேசமயம், எம்பிக்கள் அனைவரும் நேரில் சென்று வலியுறுத்த வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டால் அதை கண்டிப்பாக செய்வோம்" எனக் கூறியுள்ளார்.