மின்சாரத்தை முதன்மையாக நம்பியிருக்கும் தொழில்களுக்கு மானியம்…வெல்டர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற தொழில்களில் வெல்டிங் தொழில் மின்சாரத்தை கொண்டு முதன்மை தொழிலாக உள்ளது.

மின்சாரத்தை முதன்மையாக நம்பியிருக்கும் தொழில்களுக்கு மானியம்…வெல்டர்கள் சங்கம் கோரிக்கை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் செங்கல்பட்டு மத்திய மாவட்ட பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வெல்டர்கள் கோரிக்கை

அப்போது கலந்து கொண்ட நிர்வாகிகளின் கோரிக்கைகளை மாநில பொறுப்பாளர்கள் கேட்டறிந்தனர். மேலும் நிகழ்ச்சியின் இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் வெங்கடேசன் தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ள மின்கட்டணத்தை திரும்பபெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற தொழில்களில் வெல்டிங் தொழில் மின்சாரத்தை கொண்டு முதன்மை தொழிலாக உள்ளது.

மின் கட்டண உயர்வால் பாதிப்பு

மின்சார கட்டண உயர்வால் எங்களது தொழிலையும், வாழ்வாதரத்தை பாதிக்கின்ற வகையில் அமைந்துள்ளது. ஆகவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பபெற வில்லையெனில் மின்சார தொழிலை நம்பியுள்ள சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு மாணியம் வழங்க வேண்டுமெனவும், இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், நடத்தப்படுவதாக தெரிவித்தார்.