முறையாக அறிவிக்கவில்லை.. !தடுப்பூசி போடவந்தவர்கள் ஏமாற்றம்!!

சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து முறையாக அறிவிக்கப்படாததால் மையங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். 

முறையாக அறிவிக்கவில்லை.. !தடுப்பூசி போடவந்தவர்கள் ஏமாற்றம்!!

சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து முறையாக அறிவிக்கப்படாததால் மையங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். 

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கூடுதல் தடுப்பூசிகள் வந்ததால் நேற்று மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கின. நேற்று தமிழக அரசின் கையிருப்பில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 730 தடுப்பூசிகள் இருந்த நிலையில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 945 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் இன்று தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனினும் இது குறித்த முறையாக அறிவிக்கப்படாததால் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே தடுப்பூசி செலுத்தும் மையங்களில் வரிசையில் காத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர். தடுப்பூசி செலுத்தும் பணியை தாமதமின்றி விரைவாக மேற்கொள்ள தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்துக்கு ஜூலை மாதத்திற்கு மட்டும் 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மத்திய அரசு தொகுப்பில்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் பல்வேறு கட்டங்களாக இதுவரை 10 லட்சத்து 36 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.