உலக சிறுதானிய ஆண்டு...ஏற்காட்டில் மலை வாழ் மக்களுக்கான நிகழ்வு!

உலக சிறுதானிய ஆண்டு...ஏற்காட்டில் மலை வாழ் மக்களுக்கான நிகழ்வு!

இந்த ஆண்டு உலக சிறுதாணியங்கள் ஆண்டாக கடைபிடிக்கப்படுவதால் சிறு தானியங்களை கொண்டு உணவு வகைகளை மலை வாழ் மக்களுக்கு செய்முறை விளக்கமாக காண்பிக்கபபட்டது.

சந்தைப்படுத்துதல் பயிற்சி

ஏழைகளின் ஊட்டி  என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் விளையகூடிய  தானியங்களான ராகி, திணை, சாமை, ஆகியவற்றை வைத்து உணவு பொருட்கள் தயாரித்து அதனை மெருகூட்டி எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து சென்னை மகளிர் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் ஏற்காடு சுய உதவி குழு இணைந்து நடத்திய செய்முறை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி  ஏற்காடு தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இதில் மலை  கிராம மக்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.

சிறுதானியங்கள் செய்முறை

நிகழ்ச்சியில் சாமை கேக், ராகி நூடுல்ஸ்,தினை  அல்வா, வரகு பொங்கல் பலவனை சிறு தானிய  முறுக்கு மற்றும் பல உணவு பொருட்கள் செய்வது எப்படி என்றும் அதை சந்தைப்படுத்துவது எப்படி என்றும் அவை ஒரு சிறிய தொழிலாக செய்ய விரும்பினால் உணவு பாதுகாப்பு துறை மூலமாக வழங்கப்படும் சான்றிதழ் பெறுவது எப்படி என்றும் மலைவாழ் மக்களுக்கு எடுத்துரைத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.