நதிநீர் விவகாரத்திற்காக வழக்கறிஞர்களுக்கு மட்டும் 122 கோடி செலவழித்துள்ள கர்நாடகா !!

நதிநீர் விவகாரத்திற்காக  வழக்கறிஞர்களுக்கு  மட்டும் 122 கோடி செலவழித்துள்ள கர்நாடகா !!
பிற மாநிலங்களுக்கு இடையீயான  நதிநீர் பங்கீடு  தொடர்பான வழக்குகளில்  1990-ம் ஆண்டிலிருந்து ஆஜரான  வழக்கறிஞர்களுக்கு கர்நாடக அரசு இதுவரை சுமார் 122 கோடி ரூபாய் வரை செலவழித்திருக்கிறது என பார் பெஞ்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
சில ஆண்டுகளாகவே காவிரி  நதிநீர்  பங்கீடு விஷயத்தில் தமிழ்நாட்டு மற்றும்  கர்நாடகா,  இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதன்பின் எத்தனை ஆட்சிகள் வந்தாலும் போனாலும் இந்த விவகாரம் குறித்த தொடர் பேச்சுவார்த்தைகளும், போராட்டங்கள் முடிவில்லா தொடர்கதைகளாகவே இருக்கிறது.
 
இது தொடர்பாக இரு  மாநிலங்களுக்கும் இடையே பல வழக்குகளும், தீர்ப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 
 
இவ்வாறிருக்க, இது மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் நதிநீர் பங்கீடு விஷயங்களின்  வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கர்நாடக அரசு கடந்த 1990 - ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 122 கோடி  அளித்துள்ளது என பார் கவுன்சில்   தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, காவிரி நதிநீர் பிரச்சனை தீர்ப்பாயம்,  கிருஷ்ணா  நதிநீர் பிரச்சனை தீர்ப்பாயம், மற்றும் காவிரி நதிநீர் பிரச்சனை தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட  வழக்குகளில்  தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாது,  பிற மாநிலங்களிலிருந்தும், மொத்தம் 41 வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர்.   
 
அவர்களில்,  அதிகபட்சமாக  தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கு இடையயிலான பிரச்சனைக்கு கர்நாடக அரசு சார்பாடக வாதிட  1990 முதல் 2017-ம் ஆண்டு வரையிலேயே காவிரி நதிநீர் பிரச்சனை தீர்ப்பாயத்தில்  மொத்தம் 580 அமர்வுகளில்  இந்த வழக்கில்  ஆஜரான வழக்கறிஞர்களுக்கு, 54 கோடி வழங்கப்பட்டுள்ளது.  
 
மேலும், கிருஷ்ணா நதிநீர்  பிரச்சனை  தொடர்பாக  2004-ல் தொடங்கப்பட்ட  கிருஷ்ணா நதிநீர்  பிரச்சனை தீர்ப்பாயத்தில் 2013-ம் ஆண்டு வரை மொத்தம் 295 அமர்வுகளுக்கு, அந்த வழக்கில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும், ஆந்திர மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைக்கு கர்நாடக அரசு சார்பில்  ஆஜரான வழக்கறிஞர்களுக்கு, 43 கோடி அளிக்கப்பட்டது. 
 
 இதேபோல, மகாதேயி நதிநீர் பிரச்சனை விவகாரத்தில், 2010 முதல், 
 2017 வரையிலும்,  கர்நாடகா , கோவா, மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களுக்கு  இடையிலான  பிரச்சனைக்கு கர்நாடக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு 25 கோடி  அளிக்கப்பட்டுள்ளது என பார் கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.