அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி... லீவு விட்டாச்சு

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி... லீவு விட்டாச்சு

15 நாட்களும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவிப்பு.


அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே 10-ஆம் தேதி முதல் 15 நாட்கள் கோடை விடுமுறை அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.கோடை விடுமுறை காலத்தில் ஒவ்வொரு வாரமும் சுழற்சி முறையில் அங்கன்வடி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறையை மாற்றி தற்போது சமூக நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மே மாதம் தொடங்கியது முதல் 50 சதவீத குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிக்கு வருகை தருவதாக குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் தெரிவித்ததாக சுட்டிக்கப்பட்டப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களாக அறிவிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம்  வலியுறுத்தல் | Anganwadi Workers seeking to be declared as Government  Employees - hindutamil.in

மேலும் படிக்க | அண்ணாமலை சுற்றுப்பயணம் - அரசியலா? ஆதாயமா?

மேலும், கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக அங்கன்வாடிகளுக்கு வரும் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த 15 நாட்களும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 15 நாட்களுக்கு குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாள்தோறும், 50 கிராம் வீதம் 750 கிராம் சத்துமாவை மொத்தமாக வழங்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.