அரியலூரில் புத்தகத் திருவிழா இன்று முதல் ஆரம்பம்....!

அரியலூரில் புத்தகத் திருவிழா இன்று முதல் ஆரம்பம்....!

இன்று புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறிருக்க , இன்று அரியலூரில் 11 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவை இன்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைக்கிறார். 

அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் தென்னிந்தியா புத்தகப் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார். 

புத்தகத் திருவிழாவில்: தொல்லியல் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகளும் சிறுகதைகள், கவிதைகள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பல்வேறு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் என ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் மொத்தம் 74 அரங்குகளில் இடம்பெற  உள்ளன. 

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இந்த புத்தகத் திருவிழா இன்று தொடங்கி  மே 3-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவை ஒட்டி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலைகள், பட்டிமன்றம், நகைச்சுவை மன்றம் உள்ளிட்ட பல்வேறு அறிவு சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


 இதையும் படிக்க  }  விசிக தலைவருக்கு விக்ரமன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கமாறு கடிதம் எழுதிய இளம் வழக்கறிஞர்