" நிர்வாகத்தின் சுணக்கங்களை சரி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது" - தமிழிசை சௌந்தரராஜன்.

" நிர்வாகத்தின்  சுணக்கங்களை சரி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது" - தமிழிசை சௌந்தரராஜன்.

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் உள்ள சுணக்கங்களை சரி செய்ய வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதாக  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கண் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமலு உள்ளிட்ட ஏராளமான கண் மருத்துவர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்:-

புதுச்சேரியில் சில அதிகாரிகள் செய்வது தான் சரி என நினைத்து அவர்கள் செய்வதாகவும், ஆனால்  அது தவறாக போகின்றது என்றும், அனைத்து இடங்களிலும் நிர்வாகத்தில் சுணக்கங்கள் இருக்கும் அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளது என்றார். மற்றும், படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருப்பதாகவும் அவர்களுக்கு அநீதி இழைத்து விடக்கூடாது என்பதற்காக உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதி கருத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும் மருத்துவக் கல்லூரியில் 700க்கும் மேற்பட்டவர்கள் பணி நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்,  கொரோனா காலத்தில் பணி செய்தவர்களுக்கு செவிலியர் பணி வழங்கும் போது முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.  மேலும், புதுச்சேரி அரசு நியாயப்படி அனைத்தையும் செய்து கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக புதுச்சேரி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் பெருமிதம் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர் திறமையின் அடிப்படையில் அரசு காலிப்பணியிடங்களை தேர்வு செய்தால் தான் வேகமாக பணிகள் நடைபெறும் என்றார்.

இதையும் படிக்க     | கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சாவுக்கு காரணம் திருச்சி போலீஸ்.! - கிடைத்தது மரண வாக்குமூலம்.