இந்தியாவின் அடுத்து 25 ஆண்டுகள் மிகவும் சவாலான ஆண்டுகள் - ஆர்.என்.ரவி

இந்தியாவின் அடுத்து 25 ஆண்டுகள் மிகவும் சவாலான ஆண்டுகள்  - ஆர்.என்.ரவி

இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் மருத்துவ சேவை மையமாக சென்னை திகழ்வதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் தாஜ் கோரமண்டலில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மரபியல் நிறுவன தொடக்க விழா நடைபெற்றது.இந்தநிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மரபியல் நிறுவனத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழா மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அப்பல்லோ நிர்வாகம் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவையை வழங்கி வருவதாகவும்  இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் சென்னை மருத்துவ சேவை மையமாக திகழ்வதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | மின்வாரியத்துறைக்கு மட்டும் எப்படி கடனில் இருந்தாலும் நிதி? - சுப்பிரமணியபிள்ளை கேள்வி

மேலும், பேசிய அவர் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அவர்களை நாட வேண்டிய சூழல் இருக்கும் என எண்ணப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே சிறந்த மருத்துவசேவை வழங்கப்படுவதாகவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில், உலக நாடுகளை அஞ்சிய நிலையில் இந்தியா தடுப்பூசி தயாரித்ததோடு 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு வழங்கியதை சுட்டிக்காட்டி பேசிய அவர் கொடுப்பது என்பது நம் நாட்டின் DNA விலேயே கலந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அஜீத் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் வேண்டுகோள்.

தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவின் அடுத்து 25 ஆண்டுகள் மிகவும் சவாலான ஆண்டுகள் என்றும் 2047 ஆம் ஆண்டு நாடு 100 ஆவது சுந்தந்திர தினம் கொண்டாடும் பொழுது அனைத்து துறையிலும் முதன்மையான துறையாக இருக்கும் என்றார்.இந்த நிகழ்வில் அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி, சுனிதா ரெட்டி, பிரித்தா ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.