திருச்செந்தூரில் வசூல் வேட்டை செய்யும் அதிகாரிகள் ..! பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு,...!

திருச்செந்தூரில் வசூல் வேட்டை செய்யும் அதிகாரிகள் ..!  பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு,...!

திருச்செந்தூரை சேர்ந்த சுடலை என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

திருச்செந்தூர் நகராட்சியில் ஏற்கனவே வரி செலுத்தி வந்த வீடுகளுக்கு அரசின் நிர்ணயத்திற்கு மாறாக,   நகராட்சியின் மாமன்றத் தலைவி , நகராட்சி ஆணையாளர் ஆகியோர்  தன்னிச்சையாக சட்டத்திற்கு விரோதமாக திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட சொத்து களுக்கு 600 சதவிகிதம் அதிகமாக சொத்து வரி உயர்த்தி,  உடனடியாக கட்ட வேண்டும் என ஊழியர்கள் மூலம் கட்டாயப்படுத்துகின்றனர் எனவும், 

இதனால் திருசெந்தூர் நகராட்சி க்கு உட்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே,மேற்படி திருச்செந்தூரில் விதிக்கப்பட சொத்துவரியினை மறுசீராய்வு செய்து மறு அளவீடு செய்து தமிழக  அரசாணையின்படி வசூலிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட வீடுகளுக்கு அரசாணையின்படி   வரு வசூலிக்க வேண்டும் எனவும்,  அதோடு,  திருச்செந்தூர் நகராட்சியில் 2022 முதல் 2023 வரை சொத்து வரியை நிர்ணயிக்கும் போது, ​​30.03.2022 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட அரசாணையின்படி சொத்து வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசாணை எதிராகவும் செயல்பட்டு வரும் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் மீதும் நகர்மன்றத் தலைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து குற்ற வழக்கு பதிவு செய்து உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இதையும் படிக்க    } தஞ்சையில் மாமன்ற கூட்டத்தின் போது திமுக, அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் இடையே தள்ளு முள்ளு...!

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் , விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் கோரிக்கை குறித்து நகராட்சி நிர்வாக துறை செயலாளர் , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்க ல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 6 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க    } பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி