நாளை வெளியாகிறது பிளஸ் 12 தேர்வு முடிவுகள்

நாளை வெளியாகிறது பிளஸ் 12 தேர்வு முடிவுகள்

மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ள நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகள் அன்றைய தினமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு 4,33,000 மாணவிகளும் 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும் 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் பொதுத் தேர்வினை எழுதினர்.

12th Exam News, Photos, Videos, 12th Exam News in Tamil - News 18 Tamil

மேலும் படிக்க | அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்பு - டி.ஆர்.பாலு கடிதம்

8.50 லட்சம் மாணவர்கள். பங்கேற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றது. அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி முடிவுகளை நாளை காலை 9.30 மணியளவில் வெளியிடுகிறார்.

முடிவுகளை www.dge.tn.gov.in www.tnresults.nic.in , www.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu 12th Public Exam Starts From Tomorrow Students Asked To Arrive  At 9 Am- Tn School Education Department | TN 12th Public Exam:தமிழகம்  முழுவதும் நாளை பிளஸ் 2 தேர்வு; காலை 9 மணிக்கு வந்தால் ...

மேலும் மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை நாளைய தினமே பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.