பட்டம் பெற வந்த மாணவர் ...! ஆடைகளை களைந்து சோதனை நடத்திய காவல்துறை...!

பட்டம் பெற  வந்த  மாணவர் ...! ஆடைகளை களைந்து  சோதனை நடத்திய காவல்துறை...!

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்  கழகத்தில் கடந்த 24ம் தேதி நடந்த  பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுனர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். ஆளுனர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். 

அதேவேளையில், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்தசாமி எம்.பில் பட்டம் பெற சீறுடையுடன் வந்தார். இவரை கண்டதும் காவல் துறையினர் தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து  சோதனை நடத்தினர். மேலும் பட்டம் பெற மேடைக்கு அனுப்பாமல் அவரை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். 

இது மனித உரிமை மீறல் செயல் என கூறி காவல்துறையினர் நடவடிக்கையை கண்டித்து தஞ்சையில் உள்ள டிஜஜி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை இரும்பு தடுப்புகள் அமைத்து ஏராளமான போலிசார் நின்று தடுத்தனர். காவல்துறை தடுப்புகளை தள்ளிவிட்டு டிஐஜி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது ஒருசிலரை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர். 

அப்போது, மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கைக்கோர்த்தபடி தரையில் படுத்து கொண்டனர். அவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்து சென்றதில் காவல்துறையினரின் வாக்கிடாக்கி கீழே விழுந்து  உடைந்தது. இன்ஸ்பெக்டரின் தொப்பி பறந்தது. மாணவர்களின் சட்டை கிழிந்தது. சில நிமிடத்தில் டிஐஜி அலுவலகம் போர்க்களமாக மாறியது.

இதையும் படிக்க     } 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்...!

மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே நடந்த இந்த போராட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிக்க     } மாற்றப்பட இருக்கிறதா அமைச்சரவை...! காரணம் என்ன?