மயிலாடுதுறையில் சாதனை படைத்த மாணவிகள்..! ஆசிரியர்களின் செயலால் நெகிழ்ச்சி...!

மயிலாடுதுறையில் சாதனை படைத்த மாணவிகள்..!  ஆசிரியர்களின் செயலால் நெகிழ்ச்சி...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்  86.31%. மாணவர்கள் தேர்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்   6063 மாணவர்களும்,  5993 மாணவிகள் என மொத்தம் 12056 பேர் தேர்வு எழுதினர். இதில்  5022 மாணவர்களும், 5383 மாணவிகள் என மொத்தம் 10,405 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, மாணவர்கள் 82.83% மற்றும், மாணவிகள்   89.82% என்ற அளவில்  தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மொத்த தேர்ச்சி விகிதம் 86.31%.ஆகும். 

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், 2 அரசு பள்ளிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 29 மெட்ரிக் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிக தேர்ச்சியை பெற்றுள்ளது.   மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் ( மேகனா இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ) மாணவி ஹர்ஷினி 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தையும், ஜெயஸ்ரீ 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.

இதனையடுத்து, மதிப்பெண் வெளியிடப்பட்ட பிறகு,   மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஹர்ஷினி மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவி ஜெயஸ்ரீ இருவரும், பள்ளிக்கு வந்தபோது, அவர்களுக்கு,  பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். 

இதையும் படிக்க     } வெளியானது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...முதலிடம் பிடித்த மாவட்டம் எது...?

அதனைத்தொடர்ந்து, பள்ளி முதல்வர் பார்த்திபன் பள்ளிக்கு பெருமை தேடி தந்த இரண்டு மாணவிகளையும் அழைத்து சென்று முதல்வர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்து பாராட்டு தெரிவித்தார். அதோடு, மாணவிகளின்  ஆசிரியர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது அனைவரிடமும்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி ஹர்ஷினி தனக்கு மருத்தும்  படிக்க விருப்பம் உள்ளதாகத்  தெரிவித்தார்.

இதையும் படிக்க     } வரும் ஆண்டுகளில் 100% தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்...முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!