காவிரி, தென்பெண்ணை கர்நாடகத்தின் கழிவுநீர் சாக்கடையா? இழப்பீடு வசூலிக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!

காவிரி, தென்பெண்ணை கர்நாடகத்தின் கழிவுநீர் சாக்கடையா? இழப்பீடு வசூலிக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

கர்நாடகக் கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் கலப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிக்க : "இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய சிறகுகளை அளிக்கும் முடிவு " - பிரதமர் மோடி ட்வீட்!

அந்த அறிக்கையில், கர்நாடக மாநிலத்தின் நகரக் கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளும் கலப்பதால் பயிர்களும் பொதுமக்களும் வேதிக் கழிவுகளால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

இதனைக் கருத்தில் கொண்டு, காவிரியும் தென்பெண்ணையும் கர்நாடகத்தின் கழிவு நீர் சாக்கடையாக மாற்றப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி, இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.