கைது செய்யப்பட்ட விசிகவினர் - நீதிமன்றத்தை அவமதித்த அர்ஜூன் சம்பத் -பாதுகாப்பு கொடுத்த காவல்துறை.....

புரட்சியாளர் அம்பேத்கர் டிசம்பர் 6 நினைவுநாளையொட்டி உலகெங்கும் அவருடைய நினைவுநாளை அனுசரிக்கப்பட்டது

கைது செய்யப்பட்ட விசிகவினர் - நீதிமன்றத்தை அவமதித்த அர்ஜூன் சம்பத் -பாதுகாப்பு கொடுத்த காவல்துறை.....

பிரதமர் முதல் தொடங்கி பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்தும்  மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள். 

 

மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டும் - தொல்.திருமாவளவன்

இந்தநிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரான டி. குருமூர்த்தி கும்பகோணம் முழுவதும் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த போஸ்டரில் அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிவித்து, விபூதி பூசியும் குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் ஒட்டப்படிருந்தது.

இதனை அறிந்த விசிகவினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு தகவல் அளித்தனர் இதனையடுத்து போஸ்டர்கள் அகற்றப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏற்படும் வகையில் போஸ்டர் ஒட்டிய இமக மாநில செயலாளர் குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் டிவிட்டர் பதிவில் சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை- தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10இலட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

144 தடை உத்தரவு

குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் அம்பேத்கர் நினைவுநாளை கொண்டாட கூடாது எனவும் அப்படி கொண்டாடினால் கலவரம் ஏற்படும் எனவும் ஊர்மக்கள் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமன்றி மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு விசிக கட்சியினர் சார்பில் அம்பேத்கர்  உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி கேட்டியிருந்தனர். பட்டவர்த்தி பகுதியை சார்ந்த மூமுகக சார்பில் அதே பகுதியில் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் படத்திறப்பிற்கு அனுமதி கோரியுள்ளனர். மீண்டும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக  கூறி கோட்டாட்சியர் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

 

 

 

சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவாதம் - அர்ஜூன் சம்பத்

அம்பேதகர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்க மாட்டேன் விபூதி பட்டை அடிக்கமாட்டேன் எந்த விதமான மத அடையாளங்களையும் இடமாட்டேன்  மரியாதை செலுத்திய பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கமாட்டேன்  என  அர்ஜூன் சம்பத் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தார்.    சென்னை உயர்நீதிமன்றம் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த மணி வரை போலீசார் பாதுகாப்புடன் 5.45 மணிமுதல் 6 வரை அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து  வைத்தது.

நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அம்பேத்கர் உருவசிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது  மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோசங்கள் எழுப்பினர்.

நீதிமன்றம் அவமதிப்பு

அம்பேத்கர் மணிமண்படபத்திற்கு இந்துமக்கள் கட்சியின் தலைவர்  அர்ஜூன் சம்பத் உயர் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் 6 மணி வரை கொடுக்க பட்டநிலையில் 6.20 மணியளவில்  காவி துண்டு அணிந்துகொண்டும் காவல் துறையின் முழு பாதுகாப்போடு  அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு  வந்தனர்.

 

விசிக காவல்துறையினரிடையில்  தள்ளுமுள்ளு

மணிமண்டபத்தில்  இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் , அம்பேத்கரிய உணர்வாளர்களும் இந்து மக்கள் கட்சியினர் உயர்நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் தோளில் காவி துண்டும் அணிந்து வந்ததை எதிர்த்து கண்டன குரல்களும்  கோசங்களை  எழுப்பினர். இந்து மக்கள் கட்சியினர் காவல் துறையின் முழு பாதுகாப்போடு மரியாதை செலுத்திய பிறகு விசிக கட்சியினர் மற்றும் அம்பேத்கரிய உணர்வாளர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டன்.  

இதில் வாக்குவாதம் முற்றவே விசிக கட்சியினருக்கும் காவல் துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உயர்நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர் அவர்களை எப்படி அனுமதித்தீர்கள்?  எனவும் கேட்கவே பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட காவல்துறையினர் விசிக கட்சியினரை சார்ந்த 50 க்கும் மேற்பட்டோரை  கைது செய்தனர். இதனால் அம்பேத்கர் மணிமண்டபத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.