நீயெல்லாம் திருந்தவே மாட்டல..! கம்பி எண்ணியும் புத்தி வரல..?

கிஷோர் கே சாமியின் தொடர் ட்விட்டால் கடுப்பான நெட்டிசன்கள்..!

நீயெல்லாம் திருந்தவே மாட்டல..! கம்பி எண்ணியும் புத்தி வரல..?

நீயெல்லாம் பட்டும் திருந்த மாட்டல்ல? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் வாய்க்கு வந்ததையெல்லாம் வாந்தியெடுத்து வைக்கும் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி, குண்டாஸ் சட்டத்தில் மாமியார் வீட்டில் 5 மாதம் கம்பி எண்ணியயும் திருந்திய பாடில்லை... கருத்து சொல்கிறேன், எதிர்ப்பை பதிவிடுகிறேன் என்ற பெயரில் வக்கிரமான சிந்தனைகளைப் பதிவிடுவது, தனக்கு பிடிக்காதவர்களை மனரீதியாக, மதரீதியாகப் பாதிக்கும் கருத்துகளைப் பதிவிடுவது என சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதில் வல்லவர். தலைவர்கள் மீது மாற்றுக் கருத்து இருக்கும் பட்சத்தில் விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், அது அறத்தை மீறியதாக இருக்கக்கூடாது. இப்படி  கிஷோர் கே சாமி திரும்ப திரும்ப சர்ச்சையான கருத்துகளை வெளியிடும் பணியை செய்வதை அரசியல் விமர்சகர்களும் நெட்டிசன்களும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பற்றியும் தரக்குறைவான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர், திமுகவை ஆதரிப்பவர்களையும் இழிவாக பதிவிட்டு வந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. திமுகவை அவதூறு பரப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கடந்த ஜூன் மாதம் கிஷோர் கே.சாமியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர் பற்றி ஆபாசக் கருத்துக்களை அவர் பதிவிட்டதாக புகார் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிஷோர் கே.சாமியை இரண்டாவது முறையாக கைது செய்தனர். பின்னர், நடிகை ரோகிணி உட்பட 3 பேர், தொலைக்காட்சி நபர் ஒருவருக்கு கிஷோர் மிரட்டல் விடுத்ததாக புகாரளித்தனர். அந்தப் புகாரின் பேரில் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே.சாமி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பத்திரிகை நிருபர்கள் பற்றி அவதூறாக பேசிய கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கிஷோர் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது. மாமியார் வீட்டுல் கிஷோர் கே.சாமிக்கு ஊமக்குத்து விழுந்ததை தாங்க முடியாத பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, '' திமுக குடும்பத்தை, அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில், கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது? இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா? பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு; திமுகவிற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்'' என கருத்து பதிவிட எச்.ராஜா, காயத்ரி மற்றும் அதிமுக தலைவர்களும் கூட சேர்ந்து அழுது ஒப்பாரி வைத்தார்கள். 

இதனைத் தொடர்ந்து கிஷோர் கே.சாமியின் தோஸ்த் மாரிதாஸ் தனது நண்பனுக்கு துணையாக பார்க்க ஜெயிலுக்கு போனார்...தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் கிஷோர் கே சாமி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து வெளியே வந்த கிஷோருக்கு உள்ளே ட்ரீட்மெண்ட் சரியில்லை போல. எந்த காரணத்திற்காக உள்ளே சென்றாரோ அதையே மீண்டும் இடைவெளியே இல்லாமல் செய்து வருகிறார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த கிசோர் கே.சாமி, ஜெயில் கம்பிகள் வழியே வெளியே வரக்கூடிய நிலையில் உள்ள என் மீது குண்டாஸ் போட்டு அழகு பார்த்த , கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத திராணியற்ற முதுகெலும்பில்லாத மு க ஸ்டாலின் தலைமையிலான கோமாளிகள் தர்பாருக்கு வணக்கமுங்க என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2021-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடல்ல் நடைபெற்றது. இதில் காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கு வழங்கப்பட்டது. விழாவில் பேசிய நெல்லை கண்ணன், ‘திருமாவின் மேடையில் மடிந்தால் திருமாவின் மடியில் தானே மடிவேன் அதுதான் எனக்கு பெருமை. அந்த பெருமை கிடைத்தால் போதும். அதுதான் எனது பாக்கியம் என நெகிழ்ச்சி பொங்க பேசியிருந்தார். நெல்லை கண்ணனின் பேச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த கிஷோர் கே.சாமி, இந்த திடீர் பாச பைத்தியம் வேற என பதிவிட்டுள்ளார்.