ஐ.நா செயலாளர் பதவி விலக வேண்டும் - இஸ்ரேல்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரு பக்கமும் உயிர்சேதம் அதிகமாகியது.

இந்த தாக்குதல், 19வது நாளாக தொடர்ந்து வருகிறது. இத்துடன் உயிர்பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்க, இந்தியா, இங்கிலாந்து உட்பட பல மேற்குலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதே போல், பாலஸ்தீனுக்கு ஈரான், லெபனான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஐ. நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், 56 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பால் தவிக்கும் பாலஸ்தீனர்களுக்காக, காரணத்துடன் இஸ்ரேல் மீது ஹமாஸ் போர் தொடுத்துள்ளது,  எனத் தெரிவித்த அவர், 10 லட்சம் பேரை தெற்கு காசாவுக்கு அனுப்பிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டுகளை வீசுகிறது. ஹமாசின் தாக்குதலுக்காக பாலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவது நியாயமற்றது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் வெற்றிடத்தில் நடத்தும் தாக்குதலாகவே கருதப்படும் என்றும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் ஏலி கோஹன், இந்த கூற்றுக்கு ஆண்டனி குட்டரஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆண்டனி குட்டரசுடனான சந்திப்பையும் ரத்து செய்தார்.