இந்திராவுக்கு ஒரு நீதி? ராஜீவுக்கு இன்னொரு நீதியா?  ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கேள்வி..?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை நிகழ்வின் போது, குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட காவல்துறை உள்ளிட்ட குடும்பத்தினர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என மனு அளித்தனர்.

இந்திராவுக்கு ஒரு நீதி? ராஜீவுக்கு இன்னொரு நீதியா?  ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கேள்வி..?
இந்திராவுக்கு ஒரு நீதி... ராஜீவுக்கு இன்னொரு நீதியா..?  ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கேள்வி..?
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை நிகழ்வின் போது, குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட காவல்துறை உள்ளிட்ட குடும்பத்தினர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என மனு அளித்தனர். அவர்களிடம் பேசும் போது நியாயமாக செயல்படுவேன் என கூறியிருக்கிறார் ஆளுநர். 
 
இதுபற்றி ஆளுநரை சந்தித்த குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரான அனுசுயா கூறியதாவது : குண்டு வெடிப்பில் ராஜீவ்காந்தி மட்டும் இறக்கவில்லை. பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உட்பட பலர் இறந்தனர்.
அது ஒரு கொலை அல்ல. பல கொலைகளை செய்தவர்கள் என்பதால் தான் உச்சநீதிமன்றம் அந்த 7 பேருக்கு மரண தண்டனை வழங்கி பின் கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைத்தது. முன்னாள் பிரதமர் இந்திராவை கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்திரா கொலையாளிகளுக்கு ஒரு நீதி, ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு இன்னொரு நீதியா? இவர்கள் கூலிக்காக கொலை செய்தவர்கள். ராஜீவ் காந்தி கொலையாளிகள் மீது யாரும் இரக்கம் காட்டத் தேவையில்லை. என் மகன் நிரபராதி என பேசும் பேரறிவாளனின் தாய், உச்சநீதிமன்றத்தில் ஏன் இதனை கூறவில்லை.
ராஜீவ் கொலை நடந்த போது இக்பால் என்ற போலீஸ் சூப்பிரண்ட் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரை  போலீசார் கொலை செய்தனர். அவர்களுக்கு கட்சியினர் லட்சம் லட்சமாக நிவாரணம் வழங்கினர். தமிழக அரசும் அவர்களது வாரிசுகளுக்கு பணி வழங்கியது. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலையில், உயிரிழந்தவர்களுக்கு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. இது அநீதி அல்லவா? இவ்வாறு கூறினார் அனுசுயா.