கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விரைவில் விலகல்? மகனுக்கு பதவி வேண்டி டெல்லி பயணம்

கர்நாடக முதலமைச்சர் பதவியில்  இருந்து எடியூரப்பா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விரைவில் விலகல்? மகனுக்கு பதவி வேண்டி டெல்லி பயணம்

கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கடந்த சில நாட்களாக கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை ஊடகம் மற்றும் பொது மேடைகளில் தெரிவித்து வருகின்றனர்.

 மேலும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பி இருந்தனர்.இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.

 இந்த நிலையில் தனது மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் மோடியை சந்தித்து மாநிலங்களில் நிலவும் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினார். மேலும் பிரதமர் மோடியிடம் தன் உடல்நிலையை காரணம் காட்டி கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலக தயாரக இருப்பதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இதனையடுத்து இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்தித்து பேசியுள்ளார்.அப்போழுது தனது மகன் விஜேயேந்திராவுக்கு கர்நாடக மாநில பாஜகவில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என எடியூரப்பாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

 இந்த நிலையில் எடியூரப்பாவின்  ராஜினாமாவை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து பாஜக தலைமை இறுதி முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. எடியூரப்பா மாற்றப்பட்டால் முதல்வர் பதவியில் யாரை அமர்த்துவது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் சற்று பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் கர்நாடக பாஜகவில் பல இரண்டாம் கட்ட தலைவர்கள் இருப்பதால் அவர்களை எப்படி சமாதானபடுத்த வேண்டு இருப்பதால் இந்த விவகாரத்தில் பாஜக் கட்சி தலைமை உடனடியாக முடிவெடுக்காது என்ற தகவலும் வெளிவந்துள்ளன.