வனிதா, ஜூலி மற்றும் பலருடன் ஓ.டி.டி.யில் மினி பிக் பாஸ்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்....

ஒடிடியில் ஆரம்பமாகபோகும் மினி பிக் பாஸ்...

வனிதா, ஜூலி மற்றும் பலருடன் ஓ.டி.டி.யில் மினி பிக் பாஸ்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்....

ஆங்கிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பிக் பிரதர் என்ற ரியாலிட்டி ஷோவை இந்தியாவில் பிக் பாஸ் என்று பெயரிட்டு கடந்த பதினைந்து வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த ஷோ தென்னிந்தியாவிற்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. பிரபலங்களின் குணா அதிசயங்களை தெரிந்து கொள்வதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். அந்த ஆர்வத்தின் காரணமாகவே இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இது பத்தாது என்று மக்களின் இந்த பேராதரவை மீண்டும் அதிகரிக்க எண்ணி மினி பிக் பாஸ் ஒன்றினை நடத்த அந்த நிகழ்ச்சியின் குழு முடிவு செய்துள்ளதாம். தமிழில் முதல் சீசன் தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் 5 சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் இந்த மினி பிக் பாசையும் அவரே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 5, ஜனவரி இரண்டாவது வாரத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, ஓடிடியில் 12 முதல் 13 போட்டியாளர்கள் கொண்ட மினி பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. அந்த போட்டி 42 நாட்கள் நடக்கும் என்றும் பலவிதமான தகவல்கள் இணையத்தில் உலாவந்தன. 

இந்த போட்டியில் சீசன் 1ல் இருந்து சீசன் 5 வரை கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட பிரபலங்களை இறக்கவுள்ளதாக தெரிகிறது. ஆனால் டைட்டில் பட்டம் பெற்றவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே நிச்சியம் ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி போன்ற சில முக்கிய நபர்கள் கலந்துகொள்வதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

முன்னதாகவே, பிக்பாஸ் தெலுங்கு தொகுப்பாளரான நாகர்ஜுனா கிராண்ட் பைனலுக்கு பிறகு பிக்பாஸ் தெலுங்கு ஓ.டி.டி.யை தொகுத்து வழங்கப் போவதாக அறிவித்தார். தெலுங்கில் பிப்ரவரி மாதம் துவங்கப்பட உள்ளதாக கூறிவந்த நிலையில், தமிழில் அதற்கு முன்னர் ஜனவரி 23 ம் தேதி முதலே துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் இதனை கொண்டாடி வருகின்றனர். ஆனால் திடீரென ஓமிக்ரோன் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிக செலவில் எடுக்கப்பட்டு வெளிவர இருந்த பல முன்னனி நாயகர்களின் படங்களே ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மினி பிக் பாஸ் ஓ.டி.டி நடைபெருமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது.