10 வருட காத்திருப்பு இதை பார்க்கத் தானா? மனக்குமுறலில் உபி-க்கள்..! அலேக்கா தட்டி செல்லும் அதர் பார்ட்டி லீடர்கள்..!

வாரியத் தலைவர் பதவிக்கு கடும் போட்டா போட்டி..!

10 வருட காத்திருப்பு இதை பார்க்கத் தானா? மனக்குமுறலில் உபி-க்கள்..! அலேக்கா தட்டி செல்லும் அதர் பார்ட்டி லீடர்கள்..!

திமுகவில் அடுத்ததாக வரிசையில் இருப்பது வாரியத் தலைவர் பதவிக்கான பிரச்னை. தேர்தலில் சீட் கிடைக்காத சீனியர் திமுக நிர்வாகிகள் வாரியத் தலைவர் பதவியை நம்பியுள்ளனர். இதிலும் கட்டடத் தொழிலாள நல வாரியத்துக்கு பொன்.குமாரையும், சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸையும் அறிவித்து சொந்தக் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஸ்டாலின். 

இதனை காங்கிரஸ் தலைமையிடமே எதிர்பார்க்கவில்லை. அப்படியிருக்க மேலும் இரண்டு பதவிகளை எதிர்ப்பார்க்கிறது காங்கிரஸ். பீட்டர் அல்போன்ஸுக்கு தேர்தலில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த போதே அதனை மனைவியின் உடல்நிலைக்காக மறுத்ததாலும், தேர்தலுக்கு பிறகு மனைவி இறந்த சோகத்தில் இருந்து அவரை மீட்பதற்காகவே அவருக்கு பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியினருக்கு வாரியத் தலைவர் பதவி கிடைப்பது கஷ்டம் எனக் கூறப்படும் நிலையில், விசிக, மமக கட்சிகளும் வாரியத் தலைவர் பதவிக்காக காத்திருக்கின்றனர். அதற்கும் திமுக சீனியர் நிர்வாகிகள் சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தலின் போதே திமுக ஜெயிக்கக்கூடிய தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு வெற்றியும் வந்த பிறகு வாரியத்தில் போட்யிடுவது நியாமில்லை என்கின்றனர் திமுக சீனியர் நிர்வாகிகள். 

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தான் வாரியப் பதவிகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்பதால் அதுவரை அனைவரும் வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறது ஸ்டாலின் தரப்பு.