நடுக்கடலில் சொகுசு கப்பலில் போதை பார்ட்டி: வசமாக சிக்கிய ஷாருக்கானின் மகன் ...

உல்லாசக் கப்பலில் போதைப் பார்ட்டி நடைபெற்ற விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானிடம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடுக்கடலில் சொகுசு கப்பலில் போதை பார்ட்டி: வசமாக சிக்கிய ஷாருக்கானின் மகன் ...

எம்பிரஸ் என்ற உல்லாச கப்பலில்  நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன் 3 நாள் பயணத்தை தொடங்கியது. இந்த நிலையில் இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் விருந்து நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து எம்பிரஸ் உல்லாசக் கப்பலில்போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம்  பயணிகளுடன் பயணிகளாக அந்தக் கப்பலில் ஏறினர்.சிறிது நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் .மேலும் இந்த போதை பொருளை பயன்படுத்தியவர்கள் அனைவரும் தொழிலாதிபர்கள்,சினிமாவில் இருப்பவர்கள் என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் இதில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றதுல் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கானிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆர்யன் கான் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை, அவர் கைதும் செய்யப்படவில்லை என போதை பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார்.

இதனிடையே போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் 8 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவர்களுக்கு போதைப் பொருள் உட்கொண்டார்களா என கண்டறிய சோதனை நடைபெற்றிருக்கிறது. அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் 'ஃபேஷன் டிவி இந்தியா' இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.