குடும்பத்தலைவி பெயர் இருந்தால்தான் ஆயிரம் ரூபாய் கிடைக்குமா..?

யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்

குடும்பத்தலைவி பெயர் இருந்தால்தான் ஆயிரம் ரூபாய் கிடைக்குமா..?
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றத்திலிருந்து தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். கொரோனா நிவாரண நிதி ரூ.4000, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய நிலையில், அவர் தேர்தல் வாக்குறுதியில் அளித்த குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 என்ற திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் நிலவி வருகிறது.
 
அண்மையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குத் திட்டத்திற்கான விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி அண்மையில் தெரிவித்தார். 
இந்நிலையில் குடும்ப தலைவி பெயர் இருந்தால் மட்டும் தான் 1000 ரூபாய் கிடைக்கும் என்ற புரிதலால் குடும்ப தலைவர் பெயர் உள்ள கார்டுகளை குடும்பத்தலைவி பெயரை மாற்ற ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
அதுமட்டுமல்லாமல் கார்டுகளை பிரித்து தனிக்கார்டாக மாற்றும் விண்ணப்பங்களும் ஏராளமாக குவிகின்றன. புதிதாக திருமணமானவர்கள், இதுவரை ரேஷன் கார்டே வாங்காதவர்கள் அனைவரும் புது ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்து வருகிறார்கள்.
 
ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவி இருந்தால் மட்டும் தான் இந்த 1000 கிடைக்குமா? குடும்ப தலைவர் பெயர் இருந்தால் கிடைக்காதா என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.  
குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இத்திட்டம் பொருந்துமா? 
 
தற்போது தமிழகத்தில் உபயோகத்தில் இருக்கும்  ஸ்மார்ட் கார்டுகளில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC : என ஐந்து வகை குறியீடுகள் உள்ளன. ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், தமிழக அரசின் சலுகைகள் உண்மையாக ஏழ்மையில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வகையிலும் குடும்பத்தின் வருவாயை பொறுத்து இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தில் இவ்வாறு பிரிக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த குறியீடுகள் குறித்த அர்த்தம் இதில் அறிந்து கொள்ளலாம்.
 
PHH என்று குறிப்பிட்டிருந்தால் நியாய விலைக்கடையில் இதன் பயனாளர்கள் அரிசி, உட்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். 
 
PHH-AAY என்று குறிப்பிட்டிருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம். 
 
NPHH என்று குறிப்பிட்டிருந்தால் நியாயவிலைக்கடையில் அரிசி உட்பட அனைத்து பொருட்களையும் வாங்க முடியும். 
 
NPHH-S என்று குறிப்பிட்டிருந்தால் அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வங்கலாம். 
 
NPHH-NC : என்று குறிப்பிட்டிருந்தால் எந்த பொருளும் கிடைக்காது. இதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாக பயன்படுத்த மட்டுமே உதவும்.
 
தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் 1000 திட்டம் PHH, PHH-AAY, NPHH ஆகிய குறியீடுள்ள அனைத்து கார்டுகளுக்கு பொருந்தும். NPHH-S, NPHH-NC என்ற குறியீடுள்ள கார்டுகளுக்கு கிடைக்காது. 
 
தமிழக அரசின் அறிவிப்பாணை வந்த பிறகுதான் பணம் எந்த முறையில் மக்களின் கைக்கு வரும் என்பது குறித்த முழுத் தகவல்களும் தெரியவரும்.