இங்கிலாந்தின் பிரதமராகும் லிஸ் ட்ரஸ் யார்? அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள்!!!!!!

இங்கிலாந்தின் பிரதமராகும் லிஸ் ட்ரஸ் யார்?  அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள்!!!!!!

இங்கிலாந்தின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றார் லிஸ் ட்ர்ஸ். பல மாதங்களாக நடைபெற்ற பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னைலை பெற்றிருந்தாலும் கட்சியின் எம்.பிக்கள் வாக்குகள் அடிப்படையில் தோல்வியை சந்தித்தார்.

ட்ரஸ்ஸும் அவரது குடும்பமும்:

தேர்தலில் வெற்றி பெற்ற  லிஸ் ட்ரஸின் வாழ்க்கையும் மிகவும் சுவாரஸ்யமானது. ட்ரஸ் தற்போது இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளராக பதவி வகித்து வருகிறார். அரசுப் பள்ளியில் படித்த டிரஸ்ஸின் தந்தை கணிதப் பேராசிரியராகவும், தாயார் செவிலியராகவும் பணியாற்றியுள்ளனர். தொழிலாளர் சார்பு குடும்பத்தில் இருந்து வந்த டிரஸ் ஆக்ஸ்போர்டில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். 

எதிரெதிர் அணி:

படிப்பை முடித்துவிட்டு சில காலம் கணக்காளராகவும் பணியாற்றியுள்ளார் ட்ரஸ். அதன் பிறகு அரசியலுக்கு வந்த ட்ரஸ் முதல் தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்றார். ட்ரஸ்ஸின் குடும்பத்தினரோ தொழிலாளர் கட்சியின் ஆதரவாளராக இருந்த நிலையில் டிரஸ் கன்சர்வேடிவ் கட்சியின் சித்தாந்தத்தையே விரும்பியுள்ளார். டிரஸ் வலதுசாரியின் தீவிர ஆதரவாளராகவும் கருதப்படுகிறார். 

போரிஸ்க்கு ஆதரவு:

டிரஸ் 2010 தேர்தலில் முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரச்சினைக்கு டிரஸ் ஆரம்பத்தில் எதிராக இருந்தாலும் பின்னர் அவருடைய நிலைப்பாட்டை மாற்றி போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக செயல்பட்டார். இங்கிலாந்து ஊடகங்கள் ட்ரஸ்ஸை முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சருடன் ஒப்பிடுகின்றன. 

லிஸ் ட்ரஸ் என்பவர்:

மேரி எலிசபெத் ட்ரஸ் என்பதே இவரின் முழுப்பெயர்.  இவர் 1975 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் பிறந்தார். தந்தை ஜான் கென்னத் மற்றும் தாய் பிரிசில்லா மேரி டிரஸ். அவரது தந்தை லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், அவரது தாயார் செவிலியராகவும் பணியாற்றினர். டிரஸ்ஸுக்கு நான்கு வயதாக இருந்தபோது, ​​அவரது குடும்பம் ஸ்காட்லாந்திற்கு குடிபெயர்ந்தது. இங்கே ஆரம்பகால படிப்பை முடித்தார் ட்ரஸ். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கனடாவில் தங்கிருந்தார். 1996 இல் ட்ரஸ் ஆக்ஸ்போர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றுள்ளார். 

தொழிலாளர் கட்சியில்...:

டிரஸ் கல்லூரியில் படிக்கும் போது தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.  மேலும் அவர் மெர்டன் கல்லூரியில் படிக்கும் போது தொழிலாளர் கட்சிக்காக பிரச்சாரம் செய்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தொழிலாளர் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார் ட்ரஸ். இது தவிர, அவர் தொழிலாளர் கட்சி இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். ஒரு மாணவர் தலைவராக, டிரஸ் தொழிலாளர் கட்சிக்காக விரிவான பிரச்சாரம் செய்துள்ளார். இருப்பினும், பட்டப்படிப்புக்குப் பிறகு, அதாவது 1996 இல், அவர் தொழிலாளர்  கட்சியிலிருந்து விலகி பழமைவாத கட்சியில் சேர்ந்தார். 

அரசியல் பயணம்:

ஷெல் நிறுவனத்தில் 1996 முதல் 2000 வரை கணக்காளராக பணியாற்றினார் ட்ரஸ். இங்கிலாந்து தொலைத்தொடர்பு நிறுவனமான கேபிள் & வயர்லெஸ் நிறுவனத்திலும் இவர் பணிபுரிந்துள்ளார். இந்த நிறுவனத்தில், அவர் பொருளாதார இயக்குனர் பொறுப்பில் இருந்தார். 2005 இல் பணியாற்றிய நிறுவனத்தை விட்டு விலகினார். டிரஸ் 1998 மற்றும் 2002 இல் கிரீன்விச் லண்டன் போரோ கவுன்சில் தேர்தல்களிலும் போட்டியிட்டார். இரண்டு தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தார் ட்ரஸ். மே 4, 2006 அன்று, முதல் முறையாக கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றார் ட்ரஸ். 

எம்.பியாக ட்ரஸ்:

முதல் முறையாக 2010ல் எம்.பி.க்கு போட்டியிட்டபோது, ​​டிரஸ் பழமைவாத கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்காக பிரச்சாரம் செய்ய அவரது தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.  எம்.பி ஆன இரண்டு வருடங்களில் கல்வி அமைச்சராக பதவி பெற்றார் ட்ரஸ். கல்வி அமைச்சராக இருந்து பல சாதனைகளையும் செய்துள்ளார். 

எதிர்ப்பும் ஆதரவும்:

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை முதலில் எதிர்ப்பு தெரிவித்தார் ட்ரஸ். சில நாட்களுக்கு பின்னர் அதை ஆதரிக்க ஆரம்பித்தார் ட்ரஸ்.

வகித்த பல்வேறு பதவிகள்:

டிரஸ் 2016 இல் நீதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். 2017ல் அவருக்கு கருவூலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஜான் போரிசன் 2019 இல் பிரதமரானபோது லிஸ் டிரஸ் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.  தற்போது இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார் லிஸ் ட்ரஸ்.

இதையும் படிக்க: யார் அந்த ஜாக் தி ரிப்பர்...!!!!