ஜி.எஸ்.டி தொகை வந்தால் போதும், இது மூன்றையும் செய்து விடலாம்..! பலே திட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர்.! 

ஜி.எஸ்.டி தொகை வந்தால் போதும், இது மூன்றையும் செய்து விடலாம்..! பலே திட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர்.! 

திமுகவை 100 நாட்களுக்கு விமர்சிக்க மாட்டோம் என்று அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கூறிய நிலையில், 100 நாள் முடிவதற்கு முன்பே திமுகவை விமர்சிக்க தொடங்கிவிட்டது அதிமுக. 

தேர்தலில் வெற்றிபெறவே வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள், ஆனால் அதை நிறைவேற்றவில்லை என்று அதிமுக தலைவர்கள் சில நாட்களாகவே கூறிவந்த நிலையில் திமுகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை கூரியது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிமுக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

அந்த போராட்டத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்தார். அந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக பெரும்பான்மை இடங்களிலே வெற்றி பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், முதல் வேலை நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் சொல்லியிருந்தார்.  அதனை தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள்.. ஆனால், தேர்தல் முடிந்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படும், 5 சவரனுக்கு குறைவாக வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன அறிவிப்புகள் எதையுமே இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை" என்று அடுக்கடுக்கான புகார்களை கூறினார். 

திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கூட ஆகாத நிலையில் அதிமுகவின் இந்த போராட்டம் சமூக வலைத்தளங்களால் நகைப்புக்குரியதாகவே பார்க்கப்பட்டாலும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு அரசியல் அரங்கில் இந்த கோரிக்கை பெரிய அளவில் எழும் என்று கூறப்படுகிறது.

ஆகவே வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாங்கள் அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது , 5 பவுன் நகை கடன் தள்ளுபடி பு, மாணவர்கள் கல்விக்கடன் போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால்,அதே நேரம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசிடம் போதிய நிதி இருக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. காரணம், தமிழக அரசு தற்போது கடுமையாக நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிக்கிறது. மேலும், கடன் தொகையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்புகளுக்கு தேவையான நிதியை எங்கிருந்து திமுக கொண்டு வரபோகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேல் மிகப்பெரிய பாரமும் விழுந்துள்ளது.

ஒன்றிய அரசு கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ள ஜி.எஸ்.டி தொகையை தமிழகம் பெற்றாலே நிதிப்பற்றாக்குறையை பெருமளவு குறைத்துவிடலாம் என்று திமுக எதிர்பார்க்கிறது. அதோடு நடக்க போவது "ஸ்டாலினின் பட்ஜெட்" என்று ஏற்கனவே பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்திருந்த நிலையில், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக நலத்திட்டங்கள் போன்றவை மனதில் வைத்தே பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.