எப்போதும் இவர் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்...வைத்திலிங்கம்!

எப்போதும் இவர் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்...வைத்திலிங்கம்!

அதிமுகவில் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுக்குழு தடை தொடர்பாக நாளை காலை வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தெரிவித்தார். தீர்ப்பை நிச்சயம் மதிப்போம் எனவும் தீர்ப்புக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.

அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அதனை 2 ஆயிரத்து 600 பேர் தடுத்து விட முடியாது எனவும் அவர் கூறினார்.