ரவுடி பேபி சூர்யாவுக்கு குண்டாஸ்..சிக்கும் சிக்கா, இலக்கியா,ஜிபி முத்து...சமூகத்தை சீரழிக்கும் இண்டர்நெட் கேவலங்கள்..

ரவுடி பேபி சூர்யாவுக்கு குண்டாஸ்..சிக்கும் சிக்கா, இலக்கியா,ஜிபி முத்து...சமூகத்தை சீரழிக்கும் இண்டர்நெட் கேவலங்கள்..

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதற்கு முக்கிய காரணம் என்று ஆபாச இணையதளங்களை ஒன்றிய அரசு முடக்கியது. ஆனால் அதை விட ஆபத்தான சில விஷயங்கள்  நடந்தும் அதை கண்டும் காணாதது போல அரசு இருக்கிறது. 

அதிலும் குறிப்பாக, தற்போது யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளில் சிலர் தங்களை கவர்ச்சி கன்னிகள் என்று நினைத்துக்கொண்டு அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனங்களையும்,இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி இணையத்தை நாறடித்து கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற செயல்களால் தங்களுக்கு என்று ரசிகர் வட்டத்தை உருவாக்கி அதை தக்கவைத்து கொள்ள, சொல்லவே முடியாத இரட்டை அர்த்த அடிபுடிசண்டைகளையும் போடுகிறார்கள். 

முன்பு எல்லாம் சமூக வலைத்தளங்களை வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது கொரோனா முடக்கம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருவதால் சிறிய குழந்தைகள் கூட தற்போது  யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களில்  அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். 

இதனால் ஒன்றும் அறியாத இந்த அப்பாவி குழந்தைகள் கூட  இதுபோன்ற அரைகுறை ஆடைகளோடு சிலர் வெளியிடும் இரட்டை அர்த்த விடீயோக்களை பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டு அவர்கள் வாழ்க்கையே திசை மாறி போய் விடுகிறது. 

இதிலும் கொடுமையாக விஷயம் என்ன என்றால், இவர்கள் விளம்பரத்துக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் தான் இப்படி வீடியோ போடுகிறார்கள் என்று பலர் நினைத்து இருந்த  நேரத்தில், காசுக்காக விபச்சாரம் செய்யும் அளவு சென்று இருக்கிறார்கள் என்ற சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அப்படி காசுக்காக விபச்சாரம் செய்யும் அளவு மாறியவர் தான் ரௌடி பேபி சூர்யா, ஆரம்பத்தில் டிக்டாக்கில் வீடியோ போட்டுக்கொண்டிருந்தவர், பின் அது தடைசெய்யப்பட்டவுடன் யூடியூபில் வீடியோ போட தொடங்கினார்ர். இவருக்கு உறுதுணையாக சிக்கா என்பவரும் சேர்ந்து கொள்ள யூடியூபையே ஆபாச கிளப்பாக மாற்றிவிட்டார்கள். 

இப்படி ஆபாச விடீயோக்கள் மூலம் புகழடைந்த இந்த ரௌடி பேபி சூர்யா அந்த புகழை வைத்தே விபச்சாரமும் செய்து வந்துள்ளார். ஸ்பா என்ற பெயரில் சில இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்துவந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார். அதன்பின் சில ஆண்டுகள் அமைதியாக இருந்தவர்,  இவரைப் போல டிக்டாக்கில் பிரபலமாக இருந்த இலக்கியா என்பவரை விபச்சாரத்துக்கு அழைத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அந்த ஆடியோவில் வெளிப்படையாகவே 1 மணி நேரத்துக்கு இவ்வளவு, ஒரு மாதத்திற்கு இவ்வளவு என்று ரேட் பேசியது மட்டுமன்றி விபச்சாரத்தை ஒரு குழுவாக நடத்திவந்ததும் தெரியவந்தது. இந்த ஆடியோ ஒருவேளை பொய்யாக இருக்குமோ என்று பலரும் யோசித்து வந்த நிலையில்,அந்த ஆடியோவில் பேசியது நான் தான், அந்த ஆடியோவை வெளியிட்டது எனக்கு தேர்ந்த ஒரு அக்கா தான் என்று மாலைமுரசு நடத்திய நேர்காணலில் வெளிப்படையாகவே உண்மையை ஒப்புக்கொண்டார் ரௌடி பேபி சூர்யா.

தமிழகத்தில் விபச்சாரம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இப்படி விபச்சார தொழிலுக்கு அழைத்தது மட்டுமின்றி அதை பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார் ரௌடி பேபி சூர்யா. 

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி என்ற விளையாட்டை விளையாடி அதை தனியே யூடியூபில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்த மதன் என்பவரை குண்டர் சட்டத்தில் காவல்துறை கைது செய்தது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முக்கிய காரணமே அவர் தன்னுடன் விளையாடும் பெண்களை ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடன் பேசுவதாகவும், இதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றசாட்டு எழுந்ததாலே தான். 

விபச்சாரத்துக்கு அழைப்பதோ, விபச்சாரத்தை தூண்டும் விதமாக பேசுபவர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்று சட்டம் இருக்கும் நிலையில், பகிரங்கமாக விபச்சார தொழிலுக்கு அழைக்கும் ரௌடி பேபி சூர்யா மீது காவல்துறை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் சிக்கா என்பவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை இருக்கிறது. 

மதன் செய்த செயலுக்கு சற்றும் குறைவில்லாதது தான் ரௌடி பேபி சூர்யாவும் செய்தது. ஆகவே அவரை கைது செய்த அதே வழக்கில் இவளையும் காவல்துறையினர் கைது செய்யவேண்டும். அதிலும் தற்போது தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் சைலேந்திர பாபு தான். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொங்கி எழும் சைலேந்திர பாபுவின் கவனத்திற்கு இந்த சம்பவத்தை நிச்சயம் காவல்துறை உயரதிகாரிகள் கொண்டு செல்ல வேண்டும். இவ்வளவு ஏன் தன் பெயரில் ரௌடி என்ற பட்டத்தை சேர்த்து கொண்டதற்காகவே சூர்யாவை காவல்துறையினர் கைது செய்யலாம்.  

இது போன்ற விபச்சார வழக்கில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் ரௌடி பேபி சூர்யா கைதுசெய்யப்பட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரையும் குறைந்தபட்சம் 1 ஆண்டு வரையும் சிறையில் கழிக்க நேரிடும். இவரின் கைது இதுபோல விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள கும்பல்களுக்கும் பயத்தை கொடுக்கும். அதுமட்டுமின்றி ரௌடி பேபி சூர்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சிக்கா, இலக்கியா, ஜி.பி.முத்து போன்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அதோடு ரௌடி பேபி சூர்யா போன்றவர்களை  கைது செய்வதால் மட்டும் இந்த விவகாரம் முடிவுக்கு வராது. எப்படி அரசுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து வருவதால் ட்விட்டர் நிறுவனத்தை ஒன்றிய அரசு கவனமாக கண்காணிக்கிறதோ அதேபோல சமூகவலைத்தளங்களில் இப்படி வெளியாகும் ஆபாச விடீயோக்களை முடக்கவும் ஒரு செயல்திட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்.

பெண்களை காக்கிறோம் என்ற பெயரில் ரோமியோ ஆர்மியை உருவாக்குவதற்கு பதில், அதை விட பல மடங்கு ஆபத்தான இந்த விடீயோக்களை கண்காணிக்க அரசு முன்வர வேண்டும். அதிலும் தற்போது   சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்தும்  information and public broadcaste அமைச்சகத்தின்  இணையமைச்சராக இருப்பவரே நம்ம ஊர் எல்.முருகன் தான். கலாச்சாரத்தை போற்றும் எல்.முருகன் இப்படி கலாச்சார சீரழிவுகளை  ஏற்படுத்தும் ஆபாச யுடியூப் பக்கங்களை முடக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையும்  நமக்கு இருக்கிறது.

இதேபோல இதற்கு முன் இதைப் போன்று தான் வலிக்காமல் செய்வதில் தான் நான் ஃபேமஸ்’ எனக் கூறிக் கொண்டு, முகப்பேரில் டாட்டு கடை நடத்தி, டாட்டூ போட வரும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதனை யூடியூபில் பதிவேற்றி காசு பார்க்கும் ராஜேஷ் என்பவரைப் பற்றியும் மாலை முரசு செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியை தொடர்ந்து, தான் இரட்டை அர்த்தத்தில் பேசி வெளியிட்டிருந்த விடியோக்களை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இருந்து டெலிட் செய்தார் ராஜேஷ். ஆனால் அவர் மேல் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது. எப்படி பப்ஜி மதன், சிவசங்கர் பாபா போன்றவர்கள் மீது தமிழக அரசும், தமிழக காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுத்ததோ அதே போல இவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாலை முரசு தொலைக்காட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.