அமர்நாத் வெள்ளப்பெருக்கு காரணம் என்ன?

அமர்நாத் வெள்ளப்பெருக்கு  காரணம் என்ன?

மத்திய காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள பல்டால் முகாமுக்கு அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக குறைந்தது 16 அமர்நாத் யாத்ரீகர்கள் இறந்துள்ளதாகவும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த 35 பேர் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு உயிருக்கு அபாயமற்ற நிலையில்  இருப்பதாகவும் காஷ்மீர் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வெள்ளிக்கிழமை அமர்நாத் யாத்திரைக்கான உதவி மையத்தைஅமைத்தது.  புனித குகைக்கு அருகே மேக வெடிப்பில் 10 பேர் இறந்தது மற்றும் பலர் காணாமல் போனதை அடுத்து உதவிமையம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு அருகே ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள்  உள்ளூரில் அதிக அளவில் மழை ஏற்பட்டதே காரணம் எனவும், மேக வெடிப்பு காரணம் அல்ல என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 31 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது மேக வெடிப்பு என வகைப்படுத்த வாய்ப்பில்லை எனவும் வானிலை விஞ்ஞானிக கூறியுள்ளனர்.

பால்டலில் குறைந்தது 16 உயிர்களை பலிவாங்கிய கொடிய திடீர் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஜம்முவில் உள்ள அமர்நாத் யாத்ரா  முகாமில் அதிக  அளவு உற்சாகத்துடனும் பக்தியுடனும் தங்கள் பயணத்திற்காக திரண்டுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. 

வெள்ளிக்கிழமை நடந்த சோகத்திற்கு வருத்தம் தெரிவித்த யாத்ரீகர்கள், சிவன் மீது முழு நம்பிக்கை உள்ளதால் பயம் இல்லை என்றும், கடவுளின் இருப்பிடத்தில் இறந்தால் அது தங்களுக்கு ஒரு பெரிய பாக்கியம் என்றும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.