விவசாய நிலங்களை அதிகமாக பில் கேட்ஸ் வாங்கிக் குவிப்பது ஏன்?

விவசாய நிலங்களை அதிகமாக பில் கேட்ஸ் வாங்கிக் குவிப்பது ஏன்?

கடந்த ஜூன் மாத இறுதியில் வடக்கு டகோட்டா அட்டர்னி ஜெனரல், பில் கேட்ஸுடன் இணைந்த ஒரு நிறுவனம் 2,100 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்க ஒப்புதல் அளித்தார். ரெட் ரிவர் அறக்கட்டளை இதை உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களான கேம்ப்பெல் பண்ணையிடமிருந்து சுமார் $13.5 மில்லியனுக்கு வாங்கியது. ஃபாக்ஸ் பிஸ்னஸ் நிறுவனத்தால் பெறப்பட்ட சட்ட ஆவணங்களின்படி, கடந்த நவம்பர் மாதம் இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

வடக்கு டகோட்டாவில் கால் பதித்த பில் கேட்ஸ்

நில ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன், நிலம் அமைந்துள்ள வடக்கு டகோட்டா அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ரெட் ரிவர் அறக்கட்டளைக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் அந்நிறுவனம் நிலத்தை எவ்வாறு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியிருந்தது. "வடக்கு டகோட்டாவில்... அனைத்து பெருநிறுவனங்களும் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்களும் (எல்எல்சி) விவசாய நிலம் அல்லது பண்ணை நிலத்தை சொந்தமாக வைத்திருப்பது அல்லது குத்தகைக்கு விடுவது மற்றும் விவசாயம் அல்லது பண்ணை தொழிலில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, விவசாய நிலம் அல்லது பண்ணை நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் அறக்கட்டளைகளுக்கு சட்டம் சில வரம்புகளை முன்வைக்கிறது. கார்ப்பரேட் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவன விவசாயச் சட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட குடும்பப் பண்ணைகளை அனுமதிப்பது அல்லது வணிக நோக்கங்களுக்காக நிலத்தைப் பயன்படுத்த அனுமதிப்பது போன்ற சில விதிவிலக்குகள் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 "உங்கள் நிறுவனம் இந்த நிலத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதையும், வணிக நோக்கத்திற்கான விதிவிலக்குகள் போன்ற சட்டப்பூர்வ விதிவிலக்குகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் எங்கள் அலுவலகத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும்..." என அக்கடித்த்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏன் இவ்வளவு விவசாய நிலங்களை பில் கேட்ஸ் வாங்குகிறார்?

 மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் விவசாயத்திற்கு இவ்வளவு பணம் செலவழிக்கிறார் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருந்ததால், இது பற்றிய செய்தி தலைப்புச் செய்திகளாக மாறியது. அமெரிக்கா முழுவதும் 18 மாநிலங்களில் பில் கேட்ஸுக்கு சொந்தமாக 2,69,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் என்னும் பீதியை உலக அளவில் பரப்பி மக்களை பதற்றத்துக்குள் வைத்திருக்கும் பில் கேட்ஸ் செயற்கையான உணவு நெருக்கடியை அவசர நிலையாக அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஐ.நா. சபையின் உலக சுகாதார அமைப்பு மற்றும் இன்னும் பல ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புகள் பில் கேட்ஸின் நிதியில் தான் இயங்குகின்றன. இவை மூலமாகத் தான் பில் கேட்ஸ் தனது செயல் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பில் கேட்ஸின் மறுபக்கம்

 கேட்ஸ் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிக உச்சத்தை தொட்ட ஒருவராக அறியப்படுகிறார். ஆனால் அவரது மறுபக்கம் மிகவும் விமர்சனத்திற்குரிய ஒன்றாக உள்ளது. பில் & மெலிண்டா கேட்ஸ் எனும் அவரது அறக்கட்டளைச் செயற்பாடுகள் மனிதகுல விரோதத்திற்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆப்ரிக்காவில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பில் & மெலிண்டா கேட்ஸ் வழங்கிய போலியோ சொட்டு மருந்துகளால் ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்

 பில் கேட்ஸ் தனத சுயலாபத்திற்காக கொரோனா(கோவிட்-19) வைரஸை பரப்பியதாகவும், இதன் பின்னணியில் உலகம் தழுவிய மிகப் பெரிய தடுப்பூசி வணிக நோக்கமும் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை விசாரிக்க கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு மனுவை உருவாக்கி 30 நாட்களில் 1 லட்சம் அமெரிக்க குடிமக்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.இவ்வாறு செய்தால் இந்த மனுவை 60 நாட்களில் வெள்ளை மாளிகை பரிசீலித்து கருத்து கூறும். முக்கிய விடயமாக இருப்பின் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு இது அனுப்பி வைக்கப்படும். கடந்த ஏப்ரல்-10, 2020 அன்று இது போன்று பில் கேட்ஸை விசாரிக்கக் கோரும் மனு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது வரை 6 லட்சதிற்கும் அதிகமான மக்கள் பில் கேட்ஸுக்கு எதிரான மனுவில் கையொப்பம் இட்டுள்ளனர்.

சான்று: https://petitions.trumpwhitehouse.archives.gov/petition/we-call-investigations-bill-melinda-gates-foundation-medical-malpractice-crimes-against-humanity