போடியில் கஞ்சா விற்ற 3 பெண்கள்: சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்  

தேனி மாவட்டம் போடி பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மூன்று பெண்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போடியில் கஞ்சா விற்ற 3 பெண்கள்: சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்   

தேனி மாவட்டம் போடி பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மூன்று பெண்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் போடி நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் ஆய்வாளர் சரவணன் தலைமையில் நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் போடி போஜன் பார்க் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த கோடாங்கிபட்டி திருச்செந்தூர் காலனி பகுதியை சேர்ந்த பஞ்சம்மாள் மற்றும் போடி வரகுணன் சந்தை சேர்ந்த செல்வராணி ஆகியோரை கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து 1250 கிராம் அத உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோயில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சரஸ்வதி என்ற பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 1250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த போடி நகர் காவல்துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர்