வன விலங்கு தாக்கி 3 வயது குழந்தை மரணம்!

வன விலங்கு தாக்கியதால், உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு மூன்று வயது சிறுவனம் பரிதாபமாக உயிரிழந்தார்.

வன விலங்கு தாக்கி 3 வயது குழந்தை  மரணம்!

உத்திர பிரதேச மாநிலத்தின் பதோஹி பகுதியில் உஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூரே மட்கா கிராமத்தில், மூன்று வயது சிறுவன், வன விலங்கு தாக்கியதால் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (23 ஜூலை) நடந்ததாகத் தெரிவித்தனர்.

கியான்பூர் வட்ட அதிகாரி புவனேஷ்வர் குமார் பாண்டே இது குறித்து கூறுகையில், இறந்த குழந்தை ஆசாதுட்ன் அவரது தாய் சரோஜ் தேவி தனது குடிசையில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். மறுநாள் காலையில் தன் அருகில் ஆசாத் இல்லாததால், பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து சிறுவனைத் தேடியிருக்கிறார். ஆனால், துரதிஷ்டவசமாக அவரது குடிசையிலிருந்து 200 மீட்டர் தொலைவில், ஆசாதின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இது தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில், வனவிலங்குத் தாக்கி உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இறந்த குழந்தையின் சடலத்தில், குறிப்பாக கால்களில் காணப்பட்ட அடையாளங்கள் வைத்து, தாக்கிய விலங்கு  நரி, காட்டு நாயாக இருக்கலாம் அல்லது ஓநாயாக கூட இருக்கலாம் என வனத்துறை அதிகாரி நீரஜ் ஆர்யா உகித்தார். மேலும்குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பேசிய நீரஜ், "மழை காரணமாக, பாதத்தின் அடையாளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன," என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது.