வேலைக்கு சேர்ந்த முப்பதே நாளில் தனது கைவரிசையை காட்டி தப்பி ஓடிய ஊழியர்..!

நகைகடையில் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திற்குள் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வேலைக்கு சேர்ந்த முப்பதே நாளில் தனது கைவரிசையை காட்டி தப்பி ஓடிய ஊழியர்..!

தங்க நகை கடையில் வேலைக்கு சேர்ந்த 30 நாளில் பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடிவிட்டு ஊழியர் தப்பி ஓட்டம். சென்னை மேற்கு மாம்பலம் கோடம்பாக்கம் சாலையில் லட்சுமி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடையை கடந்த 50 ஆண்டுக்கு மேலாக நடத்தி வருகிறார் தினேஷ்.

இவரது கடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் என்பவர் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அருகில் இருக்கும் தனது சகோதரர் நகைக்கடைக்கு சென்று 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை கொடுத்து வருமாறு குல்தீப்சிங்கிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார் தினேஷ்

மேலும் படிக்க: காதலியை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்...அளித்த வாக்குமூலம் என்ன?


கடையிலிருந்த  இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்ற குல்தீப் சிங் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளுடன் மாயமாகியுள்ளார். இது பற்றி அக்கம் பக்கத்தினர் என எல்லா இடங்களிலும் தேடி குல்தீப் சிங்கை கண்டுபிடிக்க முடியாத நிலையில் குமரன் நகர் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நகைகடையில் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திற்குள் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.