உணவகத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 4 பேர்...அடுத்து நடந்தது என்ன?

உணவகத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 4 பேர்...அடுத்து நடந்தது என்ன?

கொளத்தூரில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


சென்னை பெரம்பூர் தில்லைநாயகம் தெருவை சேர்ந்தவர் கார் ஓட்டுனர் கலீம் பாஷா. இவரது மனைவி சமீமா, மகப்பேறு பரிசோதனைக்காக கொளத்தூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர், அருகில் உள்ள தனியார்  உணவு விடுதியில் சமீமா மற்றும் அவரது மாமியார் உள்ளிட்ட 4 பேர் டிபன் சாப்பிட்டுள்ளனர். 

இதையும் படிக்க : மணிப்பூர் கலவரம் : முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

அப்போது சாம்பாரில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த 4 பேருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைவரும் பெரியார் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனிடையே தகவலறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர் ஏழுமலை சம்பவ இடத்திற்கு வந்து உணவுகளை பரிசோதனை செய்தார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், பொதுமக்கள் அன்றாடம் சாப்பிடும் தனியார் உணவகங்களில் இதுபோன்ற பல்லி, கரப்பான்பூச்சி, புழு உள்ளிட்ட விஷ பூச்சிகள் இருப்பது வாடிக்கையாகி விட்டது என்றே சொல்லலாம்.