மதுபோதையில் காாில் அதிவேகமாக சென்ற நபருக்கு தா்ம அடி!

மதுபோதையில் காாில் அதிவேகமாக சென்ற நபருக்கு தா்ம அடி!

குடிபோதையில் மின்னல் வேகத்தில் காரை செலுத்திய ஓட்டுனரை பொதுமக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் கார் வாங்கி விற்கும் ஏஜென்ட் ஆக செயல்பட்டு வருகிறார். நேற்று மாலை இவருடைய நண்பர் இறந்து விட்டார் அதற்கு இவரும் இவருடைய நண்பர்களும் குடித்துவிட்டு காரில் சுடுகாட்டுக்கு சென்றபோது அங்கு ஒரு ஓரமாக நின்றுள்ள காரில் லேசாக இடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் காரை ஓட்டியுள்ளனர்.

இதில், எங்கு செல்வது என்று தெரியாமல் காரை மின்னல் வேகத்தில் ஓட்டி சென்ற போது கார் கொளத்தூர் ரெட்டேரியைத் தாண்டி மஞ்சபாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. கார் அசுர வேகத்தில் சென்றதை கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் ஏதும் அசம்பாவித சம்பவம் ஏற்படா வண்ணம் சினிமா பாணியில்  துரத்தி சென்று  மஞ்சம்பாக்கம் சாலை சந்திப்பு அருகே காரை நிறுத்தி டிரைவரை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்தனர்.

இந்த விபரம் மஞ்சம்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தையும்  ஓட்டுனரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் சுந்தர் குடிபோதையில் காரை இயக்கியது தெரியவந்தது அதிர்ஷ்டவசமாக நெடுஞ்சாலையில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது மேலும் பொதுமக்கள் கூறுகையில், இவரை பின்தொடர்ந்து வந்து  நாங்கள் காரை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததால் தான் நாங்கள் அடித்தோம் எனவும் நல்ல வேலையாக இவர் ஏதும் அசம்பாவித சம்பவத்தில் சிக்கவில்லை எனவும் கூறினர். இதுபோன்று சாலைகளில் குடித்துவிட்டு கார் ஓட்டக் கூடாது என்ற விதிமுறை இருந்தும், இது போன்ற ஓட்டுனர்களே உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக உள்ளனர் என கூறினர்.

இதன் காரணமாக மாதவரம் மஞ்சம்பாக்கம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

இதையும் படிக்க:நள்ளிரவில் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் 50 பேர் மீது வழக்கு!