கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட சுமார் 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் - டிஜிபி சைலேந்திர பாபு

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட சுமார் 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட சுமார் 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் - டிஜிபி சைலேந்திர பாபு

கொரோனா பெருந்தொற்று காலத்தில், உத்தரவை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் கைவிடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி அதுதொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்ய தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் 5ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா விதிமீறல்கள் தொடர்பான  வழக்குகளை ரத்து செய்ய கோரி மாநகர ஆணையர் மற்றும் மண்டல ஐஜிக்கு தமிழக டிஜிபிக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  அதில், கொரோனா தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்குகள் பல ஓராண்டை கடந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே வன்முறையில் ஈடுபட்டது, முறைகேடாக இ-பாஸ் பெற்றது மற்றும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போடப்பட்ட வழக்குகள் தவிர்த்து வதந்தி பரப்பியது, ஊரடங்கு உத்தரவை மீறியது, பொய் தகவல்கள் வெளியிட்டதாக போடப்பட்ட சுமார் 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விசாரணையில் உள்ளதும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் நிலுவையில் உள்ளதுமான விதிமீறல்கள் வழக்குகையும் தள்ளுபடி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.