அன்புஜோதி ஆசிரமம் : ஆதரவற்றோர் காணாமல் போனது பாலியல் வன்கொடுமை மனு தள்ளிவைப்பு - நீதிமன்றம்

அன்புஜோதி ஆசிரமம் : ஆதரவற்றோர் காணாமல் போனது பாலியல் வன்கொடுமை  மனு தள்ளிவைப்பு - நீதிமன்றம்

ஆதரவற்றோரையும் கைவிடப்பட்டோரையும் பராமரிப்பதற்காக நடத்தப்பட்ட அன்புஜோதி என்ற தொண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வெளிவந்த அதிர்ச்சயளிக்ககூடிய பல கொடூரமான செயல்களை செய்த  ஆசிரமம் தான் அன்புஜோதி தொண்டு நிறுவன ஆசிரமம்.

அன்புஜோதி ஆசிரம வழக்கு- அடுத்தடுத்து நடைபெறும் விசாரணையால் பரபரப்பு | Tamil  News Anbu Jothi Ashram Case investigation

சென்னை உயர் நீதிமன்றம் - தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

ஆதரவற்றோர் மாயமானது  தொடர்பாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

அன்பு ஜோதி ஆசிரமத்தில் அரங்கேறிய அட்டூழியங்கள்! கடிவாளம் போடச் சொல்லும்  வேல்முருகன்! | Velmurugan statement about Anbu Jothi Ashram in Villupuram  district. - Tamil Oneindia

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும் படிக்க | புதுச்சேரி: நீதிமன்றத்திற்குள் வருபவர்கள் கட்டாயம் முககவசம் - இன்று முதல் அமல்!!!

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட ஏழு பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.  இந்த மனு  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்ட காவல் துறை தரப்பு வழக்கறிஞர், ஆசிரமத்தில் இருந்து 167 பேர் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களிலும், தனியார் காப்பகங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 34 பேர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 28 பேர் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆதரவற்றோர்  இல்லம் நடத்தியதன் மூலம் மனுதாரர்களுக்கு என்ன பலன் கிடைத்தது என கேள்வி எழுப்பினார். 

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு விவகாரம்: ஒரு வாரம் கெடு விதித்த  நீதிமன்றம்!

மேலும் படிக்க | வயநாடு சென்ற ராகுல், பிரியங்கா...வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

இதற்கு காவல் துறை தரப்பில், பல்வேறு இடங்களில் இருந்து  நிதி பெறுவதாகவும், உடலுறப்பு விற்பனை நடப்பதாகவும் குற்றச்சாட்டும் உள்ளது எனவும் அது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மனுதாரர் தரப்பில், அரசிடம் ஒப்புதல் பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சேவையாக இந்த ஆசிரமத்தை நடத்தி வருவதாகவும், ஆசிரமத்துக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருந்து பலர் இந்த ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அனுப்பிய மருந்துகளே அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் , ஒரு புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜுபின் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.