நடுரோட்டில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட போலீசார் மீது தாக்குதல்...

பெங்களூருவில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடுரோட்டில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட போலீசார் மீது தாக்குதல்...

பெங்களூரு நகரில் எலஹங்கா பகுதி காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு துணை ஆய்வாளர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டிருந்த இருவரை காவல்துறையினர் கண்டித்தனர்.

இந்நிலையில் தகராறில் ஈடுபட்டு இருந்த இருவரும் காவல்துறை அதிகாரிகள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் கன்னத்தில் ஒரு நபர் சரமாரியாக அறைந்த நிலையில் மற்றொரு நபர் காவல்துறை அதிகாரியை கீழே தள்ளி அவர் கையிலிருந்த தடியை பிடிங்கி அவரைத் தாக்க முயற்சித்தார்.

நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில் காவல்துறை அதிகாரிகளை இருவர் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி சென்று தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக எலஹங்கா புதிய நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாகியுள்ள இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.