விடுதலை செய், விடுதலை செய் பசுமாட்டை விடுதலை செய்… எருமை மாடா? பசு மாடா? கண்டெய்னரில் கொண்டு சென்ற மாடுகளை சிறைபிடித்த பாஜகவினர்…

ஆந்திரா பேட்டையில் இருந்து கேரளாவுக்கு 54 எருமை மாட்டை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியை பாஜகவினர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விடுதலை செய், விடுதலை செய் பசுமாட்டை விடுதலை செய்…  எருமை மாடா? பசு மாடா? கண்டெய்னரில் கொண்டு சென்ற மாடுகளை சிறைபிடித்த பாஜகவினர்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி பெட்ரோல் பங்கில் வளாகத்திற்குள் எருமை மாட்டுகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியை பாஜகவினர்  தடுத்து நிறுத்தி லாரியின் முன்பக்கம் நின்று விடுதலை செய், விடுதலை செய் பசுமாட்டை விடுதலை செய் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். உடனே சம்பவ இடத்திற்கு உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மணிமொழியன், சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் மற்றும் போலீசார்கள் விரைந்து சென்று மாடுகள் எங்கிருந்து எதற்காக போகிறது என்று விசாரணை செய்தனர்.

போலீசார் விசாரணையில் ஆந்திரா பேட்டையில் இருந்து கேரளா மாநிலம் வாணியங்குளம் என்ற இடத்திற்கு வளர்ப்புக்கும் மற்றும் அடி மாட்டுக்கும் சேர்த்துதான் 54 எருமை மாடுகளை ஏற்றிச் செல்வதாக தெரிவித்தனர். லாரியில் என்ன மாடுகள் என்று தெரியாமலேயே எருமாடா, பசுமாடா என்று தெரியாமல் கோஷம் போட்ட பிஜேபியினர். ஆனால் இதுபோன்ற ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவுக்கு  லாரியை சில நபர்கள் கடவுள் பெயரில் அமைப்பை வைத்துக் கொண்டு லாரி மடக்கி ஒரு லட்சம் இரண்டு லட்சம் வசூல் செய்துவந்தனர்.

இந்த வசூலில் ஏற்பட்ட மோதலால் இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர்   உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில்  லாரியை மடக்கி நிறுத்திய போது மற்றோருநபர்  அதே அமைப்பைச் சேர்ந்த நபர் ஏன் லாரியை மறிக்கின்றாய் என்று கேட்டு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  உடனே அதில் ஒருவர் பிஜேபி கட்சினருக்கு போன்செய்து தூண்டிவிட்டு மாட்டை மறித்ததாக கூறப்படுகிறது. இதில் மாத மாதம் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், காவல் துறை  பல லட்சம் ரூபாய்  வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது. ஒரே அமைப்பில் பணம் வசூல் செய்வதில் ஏற்பட்ட மோதலின் விளைவே மாடுகள் சிக்கி போலீசாரின் விசாரணைக்கு வந்துள்ளது.