பயிற்சி நிறுவனத்தில் குண்டு வீச்சு! பாட்னாவில் நடந்த சம்பவத்தால் பதற்றம்!!!

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பயிற்சி நிறுவனத்தில், இலவச சேர்க்கைக்கு மறுத்ததற்காக அந்நிறுவனத்தின் மீது மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சி நிறுவனத்தில் குண்டு வீச்சு! பாட்னாவில் நடந்த சம்பவத்தால் பதற்றம்!!!

சுல்தான்கன்ஜ் காவல் நிலையத்திற்குட்பட்ட  ராம்பூர் நகர் சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சாக்கு பையில் வெடிகுண்டு மற்றும் நாட்டுத் துப்பாக்கியுடன் அந்த இடத்தை அடைந்துள்ளார். அவர் ராஜா யாதவ் என அடையாளம் காணப்பட்டார். அவர், பயிற்சி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். பயிற்சி நிறுவன உரிமையாளர் மறுத்தால், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ராஜா யாதவ் என்பவர் பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பயிற்சி நிறுவன ஊழியர்கள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த இடத்தை தாக்குவதற்கு முன்பாக ஊழியர்களின் சாதியை கேட்டதாகவும், மாதம் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் என்றும், விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி இலவசமாக வழங்க வேண்டும் எனவும் மிரட்டியதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அந்த சிசிடிவி காட்சியில், முகமூடி அணிந்த இருவர் பயிற்சி நிறுவன அலுவலகத்தின் முகப்பு கண்ணாடியை உடைப்பதைக் காண முடிந்தது. இருவரில், ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்றொருவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.